செய்திகள் :

Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!

post image

இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் முதலீடு மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட 65% பேர் பெங்களூரு, டெல்லி - என்.சி.ஆர் மற்றும் ஹைத்ராபாத் ஆகிய பெரு நகரகங்களைச் சேர்ந்த, 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.

Scam
Scam

இந்த மோசடியால் ஒட்டுமொத்தமாக ரூ.1500 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) கூறுவதன்படி கால்பங்கு (26.38%) பாதிப்பு பெங்களூரில் ஏற்பட்டுள்ளது.

Investment Scam

இந்த நகரங்களில் சந்தேகப்படாத முதலீட்டாளர்கள் அதிகமாக இருப்பதனால் முதலீடு மோசடிகளுக்கு சரியான முகாம்களாக அமைந்துள்ளன. மோசடிக்காரர்களால் குறிவைக்கப்படும் நபர்களின் வயதைக் கொண்டு (76% 30-60 வயதினர்), நன்றாக சம்பாதிக்கும் சூழலில், இன்னும் அதிகம் சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர்களைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.

60 வயதுக்கு மேலானவர்கள் அடுத்தபடியாக அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். 8.62% பேர் அதாவது, 2,829 மூத்த குடிமக்களிடமும் இந்த மோசடியை நடத்தியிருகின்றனர்.

இது ஏன் ஒரு சாதாரண மோசடி இல்லை என்றால் இந்தியா டுடே தளம் கூறுவதன்படி, சராசரியாக ஒரு நபரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள பணம் 51.38 லட்சம்!

Scam

இந்த அதிநவீன மோசடி முதலீட்டு திட்டங்களால் ஒரு நபரின் ஒட்டுமொத்த நிதி பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதை இது குறிக்கிறது.

எப்படி நடக்கிறது?

இந்த மோசடியை செய்ய குற்றவாளிகள் பல்வேறு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதாக எச்சரித்துள்ளனர். மெஸ்ஸேஜ் ஆப்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஒட்டுமொத்த வழக்குகளில் 20% டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெஸ்ஸேஜிங் ஆப் வழியாக நடந்துள்ளன. இதில் இருக்கும் தனிப்பட்ட மெஸ்ஸேஜ் அனுப்பும் ரகசியத்தன்மையும், குழுக்கள் உருவாக்கும் வசதியும் மோசடிக்காரர்களுக்கு ஏதுவானதாக அமைந்துள்ளது.

லின்க்ட்-இன், ட்விட்டர் போன்ற அதிகாரப்பூர்வ முறையான ஆப்கள் 0.31 மோசடிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. முறையற்ற, சமூக வலைத்தளங்களில் மோசடிக்காரர்கள் அதிகம் குறிவைக்கின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 41.87 விழுக்காடு மோசடிகள் நடந்த தளங்கள் 'others' என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது பலதரப்பட்ட வழிகளில் இன்னும் கண்டறியப்படாத முறைகளில் மோசடிகள் நடந்துள்ளதை இது குறிக்கிறது.

மகாராஷ்டிரா: போலீஸ் SI-ஆல் பாலியல் வன்கொடுமை; உயிரை மாய்துக்கொண்ட பெண் மருத்துவர்!

மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் உள்ள பால்தான் என்ற பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளரால் (SI) தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அத... மேலும் பார்க்க

விருதுநகர்: 'இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம்' - இரிடியம் மோசடியில் அதிமுகவினர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பேரூராட்சி அ.தி.மு.க 8 வது வார்டு கழகச் செயலாளர் பட்டுராஜன் (52), அ.தி.மு.க உறுப்பினர்கள் கந்தநிலா (55), ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் இணைந்து தனியார் அறக... மேலும் பார்க்க

மும்பை: 'அனகோண்டா குட்டிகள், உடும்புகள், ஆமைகள்' - தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த பெண் கைது

வெளிநாடுகளிலிருந்து அபூர்வமான விலங்குகள் இந்தியாவிற்கு அடிக்கடி கடத்தி வரப்படுவது வழக்கம். இந்த விலங்குகள் வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. இவ்வகையில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லா... மேலும் பார்க்க

`கேம் விளையாடாதன்னு திட்டுனாங்க' கத்திரிகோலால் தாயைக் குத்திய மகன் – இரண்டு சிறுவர்கள் கைதான பின்னணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கீழக்குப்பம் வேலூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் - பரமேஸ்வரி தம்பதிக்கு, 17 வயதில் ஒரு மகளும், 14 வயதில் சந்தோஷ் (சிறுவனின் பெயர் மாற்றப்பட்டி... மேலும் பார்க்க

`உன் கணவனை நக்சலைட் பகுதிக்கு மாற்றிவிடுவேன்’ - எஸ்.ஐ மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த IPS அதிகாரி?

சத்தீஷ்கர் மாநிலத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி ஐ.பி.எஸ் அதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சத்தீஷ்கரில் உள்ள ராய்ப்பூர் அருகில் உள்ள... மேலும் பார்க்க

Louvre Museum Heist: ரூ.847 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்படாமல் போகலாம் - ஏன்?

பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிறு (அக்டோபர் 19) அன்று பழம்பெரும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. உலகிலேயே அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கருதப்படும் அரு... மேலும் பார்க்க