செய்திகள் :

அப்போலோ: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் சிகிச்சை

post image

சென்னை அப்போலோ மருத்துவமனை, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை [Apollo Hospitals, Greams Lane, Chennai], தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் (Leadless Dual Chamber AVEIR Pacemaker] பொருத்தும் இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.

இதன் மூலம் இதய நோய் அறுவை சிகிச்சையில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை அப்போலோ மருத்துவமனை எட்டியுள்ளது. மிகவும் சிக்கலான இந்த மருத்துவ நடைமுறையை மூத்த இதயநோய் மற்றும் இதயத் துடிப்பு, இதய மின் செயல்பாட்டு நிபுணர் (Cardiologist & Electrophysiologist) மருத்துவ நிபுணர் டாக்டர் கார்த்திகேசன் (Dr. Karthigesan A. M., Senior Consultant Cardiologist & Electrophysiologist) மற்றும் அவரது இதய சிகிச்சைக் குழுவினர் மேற்கொண்டனர்.

லீட்லெஸ் டூயல் சேம்பர் ஏவிஇஐஆர் பேஸ்மேக்கர் [Leadless Dual Chamber AVEIR Pacemaker] அறுவை 80 வயதுடைய ஆண் மருத்துவ பயனாளருக்கு செய்யப்பட்டது. இவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றுடன் நாள்பட்ட சிறுநீரக நோயினால் டயாலிசிஸ் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் இவருக்கு ஏற்கெனவே ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வயது முதிர்வால் உண்டாகும் இதய அடைப்பினால் வழக்கத்திற்கு மாறாக இதயம் மெதுவாக துடிப்பது, அடிக்கடி சுயநினைவு இழப்பது போன்ற பிரச்சினைகள் அவருக்கு இருந்தன. வழக்கமான பேஸ்மேக்கர்கள் பொருத்தப்பட்டால் அவருக்கு நோய் தொற்று ஏற்படும் ஆபத்தும் அதிகமிருக்கும் என்பதால், இத்தகைய மருத்துவ பயனாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட மாற்று சிகிச்சை நடைமுறையை மேற்கொள்ளும் கட்டாயம் இருக்கிறது. இதனால், அதி நவீன மருத்துவ நடைமுறையான 'லீட்லெஸ் பேஸ்மேக்கர்' சிகிச்சை முறையைச் செய்ய அப்போலோ மருத்துவ நிபுணர் குழு முடிவு செய்தது.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

ஏவிஇஐஆர் டுயல் சேம்பர் பேஸ்மேக்கர் (AVEIR dual chamber pacemaker) அடுத்த தலைமுறை கார்டியாக் பேசிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இதய அறுவை சிகிச்சை ஆகும்... வழக்கமான பேஸ்மேக்கர் சிகிச்சையில் லீட்ஸ் மற்றும் சரிஜிக்கல் பாக்கெட் (Leads & surgical pocket) தேவை. ஆனால் இந்த நவீன ஏவிஇஐஆர் டுயல் சேம்பர் பேஸ்மேக்கர், லீட்ஸின் தேவையில்லாமல் குறைந்தபட்ச ஊடுருவும் கேதெடர் அடிப்படையிலான நுட்பத்தின் மூலம் நேரடியாக இதய சேம்பர்களில் பொருத்தப்படுகிறது. இந்த மருத்துவ நடைமுறை, திறந்த அறுவை சிகிச்சைக்கான தேவையை நீக்குவதுடன், நோய் தொற்று ஏற்படாமல், லீட் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து இடப்பெயராமல், வாஸ்குலர் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

இந்த அதிநவீன சாதனம், பாரம்பரிய முறையை விட பல நன்மைகளை வழங்குகிறது. தொடை ரத்தநாள (femoral vein approach) வழியாக மேற்கொள்ளப்படும் மருத்துவ நடைமுறையின் மூலம் மருத்துவ பயனாளர்கள் விரைவாக குணம் அடைய முடியும். மேலும் பாரம்பரிய அறுவை சிகிச்சையினால் உண்டாகும் வடுக்கள் எதுவும் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் லீட்களும், சர்ஜிக்கல் பாக்கெட்டும் இல்லாதது ரத்தப்போக்கு, தொற்று போன்ற சிக்கல்களைக் குறைக்கிறது.

மருத்துவ பயனாளர்களுக்கு சௌகரியகமாக இருக்குமளவில் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், மருத்துவ பயனாளர்களுக்கு வசதியாகவும், மிகப் பொருத்தமானதாகவும், நீண்டகால பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்கிறது.

அப்போலோ
அப்போலோ

அதே நேரத்தில் வலது ஏட்ரியம் மற்றும் வென்ட்ரிக்கிள் இடையேயான வயர்லெஸ் தொடர்பு இதயத்தின் இயற்கையான துடிப்பை ஏறக்குறைய அப்படியே பிரதிபலிக்கும் வகையில் ஒத்திசைவான, உடலியல் தன்மையை செயல்படுத்துகிறது. ஏவிஇஐஆர் (AVEIR) அமைப்பானது, மினியேட்டரைசேஷன், உள்ளடங்கிய துல்லிய கண்காணிப்பு, துல்லியமான வேகம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது சிறந்த மருத்துவ விளைவுகளையும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்கிறது.

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவரும், இதயநோய் நிபுணரும் மின் உடலியங்கியல் நிபுணருமான டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன் (Dr. Karthigesan A. M., Senior Consultant Cardiologist & Electrophysiologist, Apollo Hospitals, Greams lane, Chennai] கூறுகையில், “ஏவிஇஐஆர் இரட்டை சேம்பர் லீட்லெஸ் பேஸ்மேக்கர் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது இதயத் துடிப்பு தொடர்பான சிகிச்சையில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறையாகும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இதய நோய் சிகிச்சையிலும், சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்

இந்த புரட்சிகர தொழில்நுட்பம், லீட்கள், சர்ஜிக்கல் பாக்கெட்டுகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய வழக்கமான அபாயங்களை நீக்குகிறது. அதே வேளையில், இதயத் துடிப்பின் துல்லியத்தை இது அளிக்கிறது. இது மிகப் பொருத்தமான, திறன் வாய்ந்த முறையில், மருத்துவ பயனாளரின் சௌகரியத்தையும் சிறந்த அனுபவத்தையும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை 'இதய நோய் சிகிச்சையில் மிகச் சிறந்த முன்னேற்றம்' என்று நாங்கள் அழைக்கிறோம். இந்த முன்னேற்றம் மருத்துவ பயனாளர்களுக்கு பாதுகாப்பான, மிகவும் சௌகரியமான, நீண்டகால இதய ஆரோக்கியத்தை உறுதி செய்ய உதவுகிறது. மேலும் இது எதிர்காலத்தில் பேஸ்மேக்கர் அமைப்புகள் பயன்படுத்தப்படும் விதத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்புகளை கொண்டுள்ளது.” என்றார்.

சென்னை மண்டல அப்போலோ மருத்துவமனைகளின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி (Dr Ilankumaran kaliamoorthy, CEO, Apollo Hospitals, Chennai Region] கூறுகையில், “அப்போலோ மருத்துவமனையில், மருத்துவ பயனாளர்களுக்கான சிகிச்சைகளின் தர நிலைகளை மேலும் சிறப்பாக மாற்றி அமைக்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஏவிஇஐஆர் (AVEIR) லீட்லெஸ் பேஸ்மேக்கர் சிகிச்சை நடைமுறை வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ்

இது மருத்துவத்தில் நிபுணத்துவம், புதிய கண்டுபிடிப்புகள் மூலமான நவீன சிகிச்சைகள் சிகிச்சைகள் மூலம் மருத்துவ பயனாளர்களுக்கு மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதில் எங்களது தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த இதய நோய் சிகிச்சையை அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் கொண்டு வர வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தை இந்த மைல்கல் சாதனை மேலும் வலுப்படுத்தியுள்ளது.” என்றார்.

அப்போலோ மருத்துவமனை, இதய நோய் சிகிச்சையில் நிபுணத்துவம், நவீன சிகிச்சைகள், துல்லியமான மருத்துவ நடைமுறைகள் ஆகியவற்றில் நாட்டிலேயே முன்னோடியாக இருந்து இத்துறையில் தொடர்ந்து தேசத்தை வழிநடத்தி வருகிறது. துல்லியம், பாதுகாப்பு, நோயாளிகளுக்கு ஏற்ற வசதி ஆகியவற்றை மேம்படுத்த அண்மைக்கால நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதுபோன்ற ஒவ்வொரு முன்னேற்றத்துடனும், அப்போலோ, சுகாதாரத் துறையில் புதுமைகளை செயல்படுத்துவதில் முன்னோடியாகவும், நோயாளிகளை மையமாகக் கொண்ட சிகிச்சையில் உலக அளவில் முன்னணிலும் இருந்து, தனது முன்னணி நிலையை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264-க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது.

3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000– க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.

நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் & சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்

நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் மற்றும் சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்சமூக நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டில் தனது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், டேனி ஷெல்... மேலும் பார்க்க

எவரெஸ்ட் 'Death Zone'-ல் தவித்த ஆஸ்திரேலியப் பெண் - உடல் சொல்வதை அலட்சியப்படுத்தாதீர்!

இலக்கு முக்கியமா? உயிர் முக்கியமா? எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் கேட்கும் கேள்வி இதுதான்! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி பியான்கா அட்லர் (Bianca Adler), இந்த ஆண்டு மே மாதம் அந்தப் பரீட்சைய... மேலும் பார்க்க

`அந்த கார் கலரை எம்.ஜி.ஆர் கலர் என்றே சொல்வார்கள்’ - புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் TMX 4777 கார்

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பயன்படுத்தி, ஏறக்குறைய கடந்த 25 ஆண்டுகளாக அவரின் நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பாசிடர் கார், தற்போது சி.கே. ஆட்டோமொபைல் பெயிண்டிங் வர்க்ஷாப்பின் துணையுடன் புது... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: மகளின் ஸ்கூட்டர் கனவு; சாக்குமூட்டையில் சில்லறை; நெகிழ வைத்த விவசாயி

சத்தீஷ்கரில் விவசாயி ஒருவர் தனது மகளின் கனவை நிறைவேற்ற செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அங்குள்ள ஜஸ்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத்.இவர் விவசாயியான தனது த... மேலும் பார்க்க

காசா: போரில் பிறந்த குழந்தைக்கு 'Singapore' எனப் பெயர் - நெகிழ வைக்கும் காரணம்

காசாவில் போருக்கு நடுவே பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' எனப் பெயர் வைத்துள்ளனர் பாலஸ்தீனிய தம்பதி. இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது. சிங்கப்பூர் ஊடகமான Straits Times வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க