செய்திகள் :

Top Cooku Dupe Cooku : `எவிக்ட் ஆனப்ப கூட ரோபோ சங்கர் சார் எல்லாரையும் சிரிக்க வச்சார்!' - பிரியங்கா

post image

வெள்ளித்திரை, சின்னத்திரை என பரிச்சயமானவர் நடிகை பிரியங்கா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `டாப் குக்கு டூப்பு குக்கு' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சமீபத்தில் எலிமினேட் ஆனார். இந்நிலையில் அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.

பிரியங்கா

" நான் வீட்ல சும்மா சமைப்பேன் அவ்ளோ தான்! மத்தபடி எனக்கு பெருசா சமையல் பத்தி எதுவும் தெரியாது. அதை சொல்லித்தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்டேன். அங்க போனதும் ஒவ்வொன்னா கத்துக்க ஆரம்பிச்சேன். எப்பவுமே பயந்துட்டே தான் செட்டுக்கு வருவேன். ஏன்னா, கத்துக்கிட்ட டிஷ் மறந்துடக் கூடாதுன்னு பதட்டத்தோட இருப்பேன். அதனாலேயே எனக்கு செட்ல `பீதி பிரியங்கா'னு பெயர் வச்சிட்டாங்க.

எல்லா டூப் குக்குகளும் ரொம்ப சப்போர்ட் ஆக இருப்பாங்க. என்னுடைய மென்டார் செஃப் செரூபா ரொம்பவே பாவம். அவங்களை படுத்தி எடுத்துட்டேன். சின்ன வயசில எனக்கு பேக்கிங்ல ஆர்வம் இருந்துச்சு. ஆனா, அப்ப கத்துக்க முடியல. இப்ப செரூபா  மேம் சொல்லிக் கொடுத்து சூப்பரா கேக் செய்ய கத்துக்கிட்டேன்!" என சிரித்தவர் தொடர்ந்து பேசினார்.

" சிவாங்கியும் நானும் பேசுறது ஒரே மாதிரி இருக்கும். சிவாங்கி கூட என்கிட்ட அக்கா நானும் வளர்ந்ததும் உங்களை மாதிரி தான் பேசுவேனான்னுலாம் கேட்டிருக்காங்க. சமைக்கும் போது தான் டென்ஷனா இருக்கும். மத்தபடி செட்ல எப்பவும் கலகலன்னு தான் இருப்போம்.

ரோபோ சங்கர் சாருக்கு திடீர்னு அப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல. எல்லாரும் எவிக்ட் ஆகிப் போகும் போது அவ்ளோ சோகத்தோட இருப்பாங்க. ஆனா, அவர் வைல்டு கார்டுல மறுபடி வருவேன்னு சொல்லிட்டு எல்லாரையும் சிரிக்க வச்சிட்டு தான் போனார்.

நான் தனம் சீரியலில் ரோபோ சங்கர் சாருடைய மனைவி பிரியங்கா அக்கா கூட நடிக்கிறேன். அவருக்கு இப்படியானது எங்க எல்லாருக்குமே ரொம்ப அதிர்ச்சியா இருந்தது!" என்றவர் டியூட் படத்தில் சாங் லீட் ஆக நடித்திருந்தார். அது தொடர்பாக பகிர்ந்து கொண்டார்.

பிரியங்கா

" ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் டியூட் படத்துல நடிக்கிறேன். அது சாங் லீட் தான் இருந்தாலும் நல்ல அனுபவமா இருந்தது. என்னோட பசங்க பிரதீப் ரங்கநாதன் சாருடைய ஃபேன். செட்ல அவர்கிட்ட ஒரு வீடியோகால் பண்ணிக்கலாமான்னு கேட்கவும் உடனே சம்மதிச்சார். என் பசங்ககிட்ட வீடியோ கால்ல பேசினார். நானே கேட்கல... அவராகவே ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக்கோங்கன்னு சொன்னார். அந்த ஸ்க்ரீன் ஷாட் கூட நான் ஒழுங்கா எடுக்கலைன்னு வீட்ல போய் திட்டு வாங்கினேன். அது வேற கதை என சிரிக்கிறார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து பிரியங்கா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

BB Tamil 9: `கை வைக்கிற வேலைய வச்சிக்காத!’ - அடித்துக்கொள்ளும் கம்ருதீன், துஷார்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்... மேலும் பார்க்க

BB Tamil 9: "இப்படிலாம் பண்ணாதீங்க மேடம்"- ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்; பார்வதியிடம் காட்டமான சபரி

"கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 17: ‘ஏண்டா.. என் சாப்பாட்டை சாப்பிட்டே?” - திவாகரிடம் பாருவின் ருத்ர தாண்டவம்

‘வெறும் சத்தம் போடற இடமா இந்த வீட்டை மாத்திடாதீங்க’ என்று முன்பே உபதேசம் செய்தார் விஜய் சேதுபதி. தலையை பலமாக ஆட்டிய போட்டியாளர்கள், இன்றளவும் அதையேதான் சிறப்பாக செய்து வருகிறார்கள். இன்றைய எபிசோட் முழ... மேலும் பார்க்க

BB Tamil 9: "எதுக்கு இந்த வீட்டில இருக்கீங்க?" - கனி, பார்வதி மோதல்

"கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக... மேலும் பார்க்க

BB Tamil 9: ``அரோரா இருக்க இடத்துலதான் துஷார் இருப்பான்" - BB அப்சரா பேட்டி | Exclusive

இந்த பிக் பாஸ் சீசனின் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.முதலாவது வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறியிருந்தார். வீட்டிலிருந்து வெளியே வந்தவர் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பேட்டிக... மேலும் பார்க்க