Dude: பிரதீப்புடன் செல்ஃபி எடுக்க முண்டியத்த மாணவர்கள்.. திடீரென சரிந்த தடுப்பு....
Vishnu Vishal: `` 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு!" - விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்' திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.
ஷ்ரதா ஶ்ரீநாத், செல்வராகவன் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

விஷ்ணு விஷால் பேசுகையில், `` `ராட்சசன்' படத்தோட இந்தப் படத்தை ஒப்பிடுவாங்க. ஆனா, இது ராட்சசன் மாதிரியான திரைப்படம் கிடையாது.
`ராட்சசன்' ஒரு கல்ட் திரைப்படம். அந்தப் படம் வெளிவந்ததுக்குப் பிறகு அது பல த்ரில்லர் படங்களுக்கு ரெபரென்ஸாக இருந்துச்சு. அந்தப் படம் கொடுத்த அனுபவத்தை எங்களாலும் முறியடிக்க முடியாது.
ஆனா, நாங்க ஒரு புது விதமான அனுபவத்தை தந்தாகணும். இந்தப் படத்தோட கதைக் கேட்கும்போது இது `ராட்சசன்' திரைப்படம் கிடையாது.
அந்தப் படத்தைப் போல ஒரு அனுபவத்தைக் கொடுக்கும்னு தோனுச்சு. இந்தப் படத்துக்காக மும்பைக்குப் போய் ஆமீர் கான் சாருக்கு கதை சொல்றதுக்கு வாய்ப்பு கிடைச்சது. 4 முறை, 40 மணி நேரம் எங்களுக்காக கதைக் கேட்டாரு.
அவர் இந்தப் படத்தின் இந்தி வெர்ஷன்ல வில்லன் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு அவர் கிட்டதட்ட ஒத்துகிட்டாரு.

ஆனா, நடக்கல. பிறகு, தெலுங்குல பைலிங்குவல் திரைப்படமாக பண்ணலாம்னு ரவி தேஜா சார்கிட்ட கதை சொன்னோம். ஒரு சில காரணங்களால அது நடக்கல.
பிறகு, நம்ம இங்க படம் எடுப்போம்னு முடிவு பண்ணிட்டோம். ஏன்னா, இன்னைக்கு பேன் இந்தியாங்கிற வார்த்தையை ரொம்ப சுலபமா மிஸ்யூஸ் பண்ற வார்த்தையா இருக்குனு நான் நினைக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு படங்களிலும் புது விஷயம் எதாவது ஒண்ணு இருக்கும்.
அதுபோல, இந்தப் படத்துலையும் ஒரு புது விஷயம் இருக்கு. என் பையனோட பெயர் ஆர்யன். அவனுடைய பெயர்ல நல்ல படம் கொடுத்திருக்கேன் என்பதுல ரொம்ப சந்தோஷம்." என மேடையில் பேசினார்.