செய்திகள் :

"காட்சிகளுக்கு உயிர் சேர்த்தவர்; மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது"- சேரன் இரங்கல்

post image

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று (அக்டோபர் 23) காலமானார்.

இசையமைப்பாளரான இவர் தன் சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் – முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

சபேஷ், தேவாவின் புகைப்படம்
சபேஷ், தேவா

இவர்கள் இருவரும் இணைந்து 'சமுத்திரம்', 'தவமாய் தவமிருந்து', 'மாயாண்டி குடும்பத்தார்', 'பொக்கிஷம்' 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' மற்றும் 'கோரிப்பாளையம்' போன்ற பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றனர்.

இவை தவிர ஜோடி, ஆட்டோகிராஃப் உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்திருக்கின்றனர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் பணியாற்றியிருக்கிறார்.

68 வயதாகும் சபேஷ் சிறுநீரகப் பிரச்னை காரணமாக சமீபத்தில் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்தார்.

இவரின் மறைவிற்கு இயக்குநர் சேரன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

சபேஷ்
சபேஷ்

இதுதொடர்பாக சேரன் வெளியிட்டிருக்கும் பதிவில், " தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் படங்களின் இசையமைப்பாளரில் ஒருவரும் ஆட்டோகிராஃப் உட்பட மற்ற படங்களில் ரீரெக்கார்டிங்கில் காட்சிகளுக்கு உயிர் சேர்த்தவருமான சபேஷ் அவர்களின் மறைவுச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது .. ஏற்றுக்கொள்ள முடியா இழப்பு.. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Aaryan: `` என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது!" - பட விழாவில் விஷ்ணு விஷால்!

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்' திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.ஷ்ரதா ஶ்ரீநாத், செல்வராகவன் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.Aary... மேலும் பார்க்க

Vishnu Vishal: `` 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு!" - விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடித்திருக்கும் `ஆர்யன்' திரைப்படம் இம்மாதம் 31-ம் தேதி திரைக்கு வருகிறது. ஷ்ரதா ஶ்ரீநாத், செல்வராகவன் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. வி... மேலும் பார்க்க

``மகனுக்காக நாடக மன்றமே ஆரம்பிச்ச மனோரமா ஆனால்" - நினைவுகள் பகிரும் மனோரமாவின் மேனேஜர்

தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்ததுடன், நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து சகாப்தமாய் திகழ்ந்தவர் 'ஆச்சி' மனோரமா. அவரின் மகன் பூபதி (வயது 70), உடல் நலக்குறைவால் இன்று காலமானா... மேலும் பார்க்க

Bison: ``பல காட்சிகளில் என்னைப் பொருத்திப் பார்த்தேன்" - மாரி செல்வராஜை பாராட்டிய அண்ணாமலை

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், `அருவி' மதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான `பைசன் காளமாடன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி... மேலும் பார்க்க