படத்தின் முதல் தலைப்பு; `ஊறும் ப்ளட்' பாடலுக்கான ஐடியா - `Dude' இயக்குநர் பகிர்ந...
"பாஜக 'Compose' செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார்" - விஜய்யை சாடிய கருணாஸ்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப் பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்தக் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்தான் தமிழக அரசியலில் பெரும் பேசிபொருளாகி வருகிறது. இது குறித்து பலரும் பல்வேறு கருத்துகள் தெரிவித்த வண்ணமிருக்கின்றனர்.
இது குறித்து விஜய்யை விமர்சித்துப் பேசியிருக்கும் கருணாஸ் "கரூர் கூட்ட நெரிசல் அசம்பாவிதம் நடந்த அந்த நள்ளிரவே விஜய் களத்தில் நின்றிருக்க வேண்டும். அன்று அங்கிருந்து ஓடியது தவறானது.
மக்களுக்காக, பாதிக்கப்பட்ட அவரது ரசிகர்களுக்காக அவர் நின்றிருக்க வேண்டும்.
'இவர் நமக்கானவரா? மக்களுக்காக நிற்பவரா?' என்று மக்கள்தான் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

பாஜக இந்த விஷயத்தை வைத்து சந்துல சிந்து பாடுறாங்க. பாஜக 'Compose' செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார், விரைவில் பாடல் ரெடியாகும் என நினைக்கிறேன். பனையூர் கேட்-ன் பூட்டு வெளியே போட்டுருக்கா? உள்ளே போட்ருக்கா? என நீங்கதான் பார்க்கணும்” என்று பேசியிருக்கிறார் கருணாஸ்