செய்திகள் :

"சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை; ஆனால்.." -155 சதவிகித வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் விளக்கம்

post image

சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் இரு நாட்டின் உறவிலும் விரிசலை உண்டாக்கலாம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

சீனா ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தல்களுக்கு பணியாது. காரணம், கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தபோது, சீனா எதிர்வினையாக வரி விதித்ததே தவிர, பணியவில்லை.

இதனால், ட்ரம்ப் செயல்கள் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போரை உண்டாக்கலாம். இது பிற உலக நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சீனாவின் மீதான இந்த 155 சதவிகித வரி விதிப்பு எச்சரிக்கைக் குறித்து ட்ரம்ப், "சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாவே சீனாதான் அமெரிக்காவிடம் கடுமையாக நடந்துகொள்கிறது. இதற்கு முன் இருந்த அமெரிக்க அதிபர்கள் வெளிநாட்டு வணிகத்தில் மெத்தனமாக இருந்துவிட்டனர். அதை சீனா மட்டுமல்ல பல்வேறு நாடுகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். என்னால் அப்படிவிட முடியாது.

ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியா உடனான வர்தகங்கள் எல்லாம் நல்லமுறையில் நடந்து கொண்டிருக்கின்றன. சீனாவுடனான இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்காவின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது." என்று பேசியிருக்கிறார்

``சென்னை மெட்ரோ முதலிடம்'' - 32 நாடுகளின் மெட்ரோ நிறுவனங்கள் பங்கேற்ற ஆய்வு முடிவு - என்ன சொல்கிறது?

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளதாக வாடிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ எ... மேலும் பார்க்க

தீபாவளி பட்டாசு: `செய்ய வேண்டியவை - செய்யக்கூடாதவை' - சென்னை மாநகராட்சி அறிவுரை

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே... மேலும் பார்க்க

தெலங்கானா முழுவதும் பந்த்; இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒருங்கிணைந்த போராட்டம்; பின்னணி என்ன?

தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18ம் தேதியான (இன்று) மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலங்கானா மாநில அரசு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 42% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்; 3 கிரிக்கெட் வீரர்கள் பலி; என்ன நடந்தது?

போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்த... மேலும் பார்க்க

டாலர் பிரச்னையால் திணறும் மாலத்தீவு; சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; என்ன செய்யப்போகிறது இந்தியா?

மாலத்தீவு என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுற்றுலாதான். இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு, சுற்றுலாவுக்குப் பெயர்போன தீவு. ஆனால் கொரோனாவுக்குப் பிறகு மாலத்தீவின் சுற்றுலா வருமானம் மெல்ல சரிவை நோக்கித் ... மேலும் பார்க்க

Diwali Leave: ``அக்., 21 ஆம் தேதி பொது விடுமுறை" - தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்... மேலும் பார்க்க