பீகார் தேர்தல்: லாலுவை கைவிடாத யாதவர்கள் - அணுகுமுறையை மாற்றிய பாஜக கூட்டணி!
மோடி போன்கால்: 'இனி இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்காது; பாக். உடன் போரில்லை' - ட்ரம்ப்
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
மோடி - ட்ரம்ப் போன்கால்
இந்த நிலையில், நேற்று இந்திய அமெரிக்க பிசினஸ்மேன் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இப்போது தான் உங்கள் பிரதமரிடம் பேசினேன். நாங்கள் வர்த்தகம் குறித்து உரையாடினோம். இன்னும் நிறைய விஷயங்கள் குறித்து பேசினோம். ஆனால், முக்கியமாக, வர்த்தகத்தைப் பற்றியே பேசினோம். அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.
எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. அவர் இனி ரஷ்யாவில் இருந்து அதிக எண்ணெய் வாங்கப்போவதில்லை.
அவருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தைக் காணவேண்டும்.
தொலைபேசி உரையாடலின்போது, போர் குறித்தும் கொஞ்சம் பேசினோம். வர்த்தகம் பற்றிப் பேசியதால் போர் குறித்தும் பேசமுடிந்தது. இனி இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே போர் இருக்காது. இது மிக மிக நல்ல விஷயம்" என்று பேசியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தத்திற்குப் பிறகு, வர்த்தகத்தைக் காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக பலமுறை ட்ரம்ப் கூறிவிட்டார். இப்போது, அதே மாதிரியான கூற்றை தான் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும்?