`டியூட் படத்தில் 2 இளையராஜா பாடல்கள்; தனி வழக்கு தொடரலாம்' - சென்னை உயர் நீதிமன்...
``எங்க பகுதியில மழைநீர் தேங்கியிருக்கு வந்து பாருங்க என்கிறார்கள், ஆனால்'' - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலார்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாகப் பெய்த மழைக்கே சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. இந்த மழைக்காலத்தை சமாளிக்க முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்துப் பேசியிருக்கும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
"வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதையடுத்து இரண்டு நாளில் இன்னொரு மழையும் வரலாம் என்று வானிலையாளர்கள் கூறுகிறார்கள். அது வலுவடை வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது."
அதை மனதில் வைத்து இந்த மழைக்காலத்தில் பணியாற்ற வேண்டும். மழைக்கால பணிகளைச் செய்து வருகிறோம். அப்போது தொடர்ந்த மழையால் அங்காங்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. ஆய்வுக்காக நான் களத்திற்குச் செல்லும்போதெல்லாம் மக்கள்,
"எங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியிருக்கு, வந்து பாருங்க" என கோபமாக அல்லாமல் அன்புக் கோரிக்கையாக வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கூப்பிடுகிறார்கள்.
"நீங்கள் வந்து பார்த்தீங்கனா எல்லாம் சரியாக நடக்கும், அதிகாரிகள், கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" என சொல்கிறார்கள்.

"பாதிப்புகள், தவறுகளை முதல்வர் கேள்வி கேட்டால் உடனே நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. இந்த மழையில் மக்களோடு நாம் நிற்க வேண்டும். என்றும் அவர்களுக்காக நாம் நிற்போம் என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்," என்று பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.