செய்திகள் :

கோலியைப் பின்னுக்குத் தள்ளிய 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை; 37 வருட சாதனையை சமன் செய்த பிரதிகா

post image

நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் மிஞ்சியிருக்கும் ஒரு இடத்தைத் தங்களுக்கானதாக மாற்ற நியூசிலாந்தும் இந்தியாவும் இன்று (அக்டோபர் 23) மோதின.

இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சோபி டிவைன் பவுலிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவும், பிரதிகா ராவலும் விக்கெட் விடக்கூடாது என்ற நோக்கில் மிகவும் நிதானமாக ஆடினர்.

Pratika Rawal - பிரதிகா ராவல்
Pratika Rawal - பிரதிகா ராவல்

பவர்பிளேயின் கடைசி ஓவரில் பிரதிகா ராவல் பவுண்டரி அடித்து 15 ரன்கள் தொட்டபோது தனது ஒருநாள் போட்டி கரியரில் 1,000 ரன்களைத் தொட்டார்.

25 வயதாகும் பிரதிகா ராவல் இப்போட்டிக்கு முன்பு வரை 22 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம், 7 அரைசதம் உட்பட 988 ரன்கள் அடித்திருந்தார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 1,000 ரன்களைத் தொட்ட வீராங்கனை என்ற சாதனை ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை லிண்ட்சே ரீலர் வசம் 37 வருடங்களாக (1988) இருந்த நிலையில், பிரதிகா ராவல் இன்று தனது 23-வது ஒருநாள் போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்றவாறு அந்தச் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

அதேசமயம், இந்தச் சாதனையோடு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 21-ம் நூற்றாண்டில் அதிதேவகமாக 1,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் பிரதிகா ராவல்.

ஒட்டுமொத்தமாக (இருபாலர்) ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (24), ஷிகர் தவான் (24) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.

(இந்திய ஆடவர் அணியின் தற்போதைய கேப்டன் சுப்மன் கில் 19 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்து முதலிடத்தில் இருக்கிறார்).

Pratika Rawal - பிரதிகா ராவல்
Pratika Rawal - பிரதிகா ராவல்

இத்தனைச் சாதனைகளோடு நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கிய பிரதிகா ராவல், 122 பந்துகளில் சதமடித்து தனது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.

சதமடித்த பிறகும் அதிரடி காட்டிய பிரதிகா ராவல் 122 ரன்களில் அவுட்டானார். இதற்கிடையில், ஸ்மிருதி மந்தனாவும் 109 ரன்கள் அடித்து அவுட்டானார். இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனாவும் பிரதிகா ராவலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுவான அடித்தளமிட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெஸ்ட் இன்டீஸுக்கெதிரான தொடரில் அறிமுகமான பிரதிகா ராவல், தனது முதல் 8 போட்டிகளிலேயே ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடித்து 500 ரன்களைக் கடந்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 500 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

`வாடி ராசாத்தி!' - சதமடித்த ஸ்மிருதி மந்தனா; இன்னும் 2 சதங்களில் காத்திருக்கும் சாதனை

இந்தியா மற்றும் இலங்கை நடத்திவரும் நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் இரு போட்டிகளில் வென்ற இந்திய அணி, அடுத்த 3 போட்டிகளில் தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்... மேலும் பார்க்க

AUS v IND: முடிவுக்கு வந்த இந்தியாவின் 17 வருட வெற்றிநடை; தொடரை வென்ற ஆஸ்திரேலியா

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.இந்த நிலையில், அடிலெய்டு மைதானத்தில் இர... மேலும் பார்க்க

``சர்ஃபராஸ் கானை ஏன் தேர்வு செய்யவில்லை?; கவுதம் கம்பீர் நிலைப்பாடு என்ன?'' - காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், மதச் சார்புடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். நேற்றையதினம் (அக்டோபர் 21) வெளியான இந்தியா... மேலும் பார்க்க

அடிலெய்டில் 17 வருடங்களாகத் தோற்காத இந்தியா; முற்றுப்புள்ளி வைக்குமா ஆஸி., வெற்றி யாருக்கு?

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அக்டோபர் 19-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற... மேலும் பார்க்க

Womens World Cup: மீதமிருக்கும் ஓர் இடம்; மோதும் 3 அணிகள் - இந்தியாவுக்கான வாய்ப்பு என்ன?

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தி வரும் (செப்டம்பர் 30 - நவம்பர் 2) ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைத் தொடர் லீக் சுற்று முடிவை நெருங்கிவிட்டது.தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் டாப் 3 இடங்களில் இ... மேலும் பார்க்க

பண்ட் கேப்டன், சாய் சுதர்சன் துணைக் கேப்டன்; சர்பராஸ் எங்கே? BCCI வெளியிட்ட இந்திய `ஏ' அணி!

இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோற்றது.இரண்டாவது ஒருநாள் போட்டி ந... மேலும் பார்க்க