செய்திகள் :

``எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!'’ - 'சத்தமில்லா' தீபாவளி கொண்டாடும் கிராமங்களின் பின்னணி

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

இந்தியாவின், முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி.

என்னதான் தமிழ்நாட்டில், வட இந்திய பண்டிகைகள் அதிகம் கொண்டாடப்படுவதில்லை என்றாலும், தீபாவளி நாளடைவில் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டது.

பணக்கார குடும்பங்கள், நடுத்தர குடும்பங்கள், ஏழை, எளிய குடும்பங்கள் முதல் அனைவரும் கொண்டாடும் திருநாளாக தீபாவளி பண்டிகை மாறிவிட்டது.

வீடுகளில், அகல்விளக்குகளால் அலங்கரித்தல், மாடங்களில், முற்றங்களில், விளக்குகளை, அடுக்கி ஒளிர செய்வதே தொடக்க கால வழக்கமாக இருந்தது.

பகட்டாக வாழும் செல்வந்தர்களின் மூலமும்,அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்ததாலுமே,தீபாவளி தினத்தன்று பட்டாசுகளை வெடிக்கும் பழக்கம், நம்மை தொற்றிக் கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

காலப்போக்கில், தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்தல் என்பது பொருள் என்று பேசும் அளவிற்கு இந்த பழக்கம் நம்மோடு ஒன்றிவிட்டது.

பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு, நம் தமிழ்நாட்டின் சிவகாசி பெரும் தொழிற்சாலைகளை அமைத்துக் கொண்டது.

இப்படி நம் வாழ்வியலோடு ஒன்றிப்போய்விட்ட பட்டாசு வெடிக்கும் பழக்கம்.

ஒரு சில இடங்களில், மட்டும் (விதிவிலக்காய்) அந்தப் பழக்கம் இல்லாத, அதற்கு பழக்கப்படாத,மக்களும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் .

இது கேட்போருக்கும், பார்போக்கும், ஆச்சரியத்தை தரலாம். ஆனால், மிகை இல்லாத உண்மை.

நம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் பண்டிகை காலங்களிலும், இறுதி சடங்கு, சுப நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளுக்கும் பட்டாசை பயன்படுத்தாத கிராமப்புறங்களில் உள்ளன.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளை சார்ந்த கிராம மக்கள் இந்த பட்டாசு வெடிப்பதை தவிர்த்ததற்கு ஒரு தனித்துவமான காரணத்தை முன் வைக்கிறார்கள்.

இயற்கையின் வளத்தையும், அதன் போக்கையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, என்றும் நம் கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக தருகிறார்கள்.

நம் தமிழ்நாட்டின் இயற்கையின் மீது அவர்களின் அத்தனை அன்பையும், சிறு சிறு செயல்களால், முயற்சிகளால் வெளிப்படுத்தும் இந்த எளிய மக்களின் விவரங்களை இங்கே பகிர்கிறேன்.

  • பறவைகள் சரணாலயம் இருக்கிற பகுதிகள்

  • விளிம்பு நிலையில் உள்ள மிருகங்கள் வாழ்கின்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகள்

  • வனவிலங்கு சரணாலயங்கள் இதுபோன்ற பாதுகாப்பு தேவைப்படுகின்ற, இயற்கை வளத்தை மென்மேலும் பேணப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கின்ற இடங்கள்

ஆகியவற்றில் வாழுகின்ற கிராம ஊராட்சியின் மக்கள் அவர்களே, தங்களுக்கு என ஒரு சட்டத்தை இயற்றிக் கொள்கின்றனர்.

எந்த நிகழ்விலும் அது தீபாவளி பண்டியாக இருக்கட்டும், கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளாக இருக்கட்டும் அல்லது இயம காரியங்கள் நடைபெறுகின்ற துக்க நிகழ்வாக இருக்கட்டும், எதுவாகிலும் இயற்கை வளமான, வனப்பகுதியை தங்களின் வாழ்விடமாகக் கொண்ட பறவைகள் விலங்குகள் பாதிக்கப்படக்கூடாது, என்பதற்காக இந்த நல்லுள்ளம் கொண்ட மக்கள், அவர்களின் பண்டிகைகளில் பட்டாசு வெடிப்பதில்லை. இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா?

இந்த மக்களின், தூய உள்ளம் எதில் தெரியுமா வெளிப்படுகிறது! இவர்கள் எந்த இடத்தினிலும், தாரை தப்பட்டை, மேல வாத்தியம் போன்ற அதிகம் சத்தம் எழுப்பக்கூடிய எந்த ஒரு இசைக் கருவியும் கூட அவர்களின், கிராம நிகழ்வுகளுக்கு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவது இல்லை என உறுதி கொண்டிருக்கிறார்கள்.

இந்த செய்திகளில், எல்லாம் நமக்கு கேட்கவே வியப்பாக இருக்கிறது! ஆனால், இவர்களின் இயற்கையின் மீதான காடுகளின் மீதான அன்பும் அக்கறையும், இவர்களின் செயல்களில் மூலமாகவே வெளிப்படுகிறது.

பின்வரும் பகுதியில்,

எந்தெந்த பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை!

அந்த கிராம மக்கள், கூறும் கருத்து என்ன, என்பதையெல்லாம் தரவுகள் மூலம் காண்போம் !!

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

சென்னை அருகே உள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிற, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் அதே மாவட்டத்தில் உள்ள கற்கிலி பறவைகள் சரணாலயம் இருக்கிற பகுதியை சுற்றி இருக்கிற 4 கிராம ஊராட்சிகளிலும் கிராம மக்களே எடுத்த முடிவு என்னவென்றால், பறவைகள் வந்து தங்கி செல்வதனால் அவற்றின், இனப்பெருக்கத்திற்காக அவற்றின் வாழ்விடம் எந்த ஒரு பாதிப்பிற்கும் உள்ளாகாத வண்ணம்,பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதில்லை!

இன்றும் தாரை தப்பட்டை போன்ற அதிகம் சத்தம் எழுப்பக்கூடிய இசைக்கருவிகளை உபயோகிப்பது இல்லை.

என்று முடிவு செய்து இருக்கிறார்கள்,இதன் விளைவு ஆஸ்திரேலிய,இந்தோனேசிய,பறவைகள் மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய அரிய பறவைகள்,அவற்றின் இனப்பெருக்கம் உயர்ந்து! அவற்றுக்கான ஏதுவான சூழ்நிலை பாதுகாக்கப்படுகிறது.

29.5 எட்டார் பரப்பளவு உள்ள அந்த சரணாலயம், பல்வேறு நாடுகளை சார்ந்த பறவைகள், ஆண்டின் பல்வேறு காலத்திலும் வந்து இனப்பெருக்கம் செய்ய,

இவர்களின் முயற்சி பெரும் உதவியாக அமைந்திருக்கிறது.

வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

ஈரோடு மாவட்டத்தில், உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம், குறிப்பாக `பிளம்மிங்கோ’ என்னும் அறிய சிவப்பு நிறம் கொண்ட கொக்கு வகை, அவற்றின் இனப்பெருக்க தளமாக அமைந்திருக்கிறது!

இந்த சரணாலயத்தை சுற்றி இருக்கிற, புங்கம்பாடி, கருக்கல் குட்டு, செல்லப்பம்பாளையம், சமன்டன்பாளையம் போன்ற கிராமங்களில், உள்ள 900 குடும்பங்களும் தீபாவளி போன்ற எந்த பண்டிகையிலும், பட்டாசுகளை வெடிப்பதில்லை, என்று முடிவு எடுத்து அதை கடைபிடித்து வருகிறார்கள்.

இதனால் பல்வேறு விதமான அரிய பறவை இனங்கள், அவற்றின் இனப்பெருக்க காலம் எந்த பாதிப்பும் இன்றி எண்ணிக்கை உயர காரணமாய் அமைந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் படங்கள்

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

சிவகங்கை மாவட்டத்தில், இருக்கிற வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில், அறிய மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பட்டியலில்  இடம்பெற்று இருக்கிற பறவைகள், அவற்றின் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்வது வழக்கம்.

ஆதலால் அந்த சரணாலயத்தை சுற்றி இருக்கிற, கொள்ளுக்குடி பட்டி, வேட்டங்குடி பட்டி, கிருஷ்ணாபுரம், சிங்கப்பூணரி போன்ற கிராம மக்கள், அனைவரும் ஒன்று கூடி ஊராட்சியின் மூலம் சிறப்பு கிராம கூட்டம் நடத்தி, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிப்பதில்லை இன்று முடிவெடுத்தனர்.

இன்றும் அந்த பழக்கம் நடைமுறையில் இருக்கிறது.

முதுமலை புலிகள் சரணாலயம்,அமைந்திருக்கிற மசினகுடி பஞ்சாயத்தில்,மக்கள் அனைவரும் பட்டாசுகள் வெடிப்பதில்லை.

அதிக சத்தம் எழுப்பக்கூடிய,தாரை தப்பட்டை மற்றும் அதிக ஒளி எழுப்பக்கூடிய ஸ்பீக்கர்கள்,கொண்டு பாட்டு இசைப்பதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.

நீலகிரியின் காப்புக்காடுகள்

நீலகிரியின், காப்புக்காடுகள் அதிகம் உள்ள பகுதியில் அரசின் வனத்துறையினரே, பட்டாசுகள் வெடிக்க கூடாது.

சத்தம் எழுப்பக்கூடிய எந்த செயலும் செய்யக்கூடாது, என்று உள்ளூர் விதி ஒன்றை, உருவாக்கி இருக்கிறார்கள்.

சரணாலயங்களில் மட்டும் இல்லாமல், திருநெல்வேலியில் இருக்கிற, கூந்தன் குளம் என்ற பகுதியில், அதிக அளவு வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து போவதால், அந்தப் பகுதியின் மக்களும், இதே நடைமுறையை பின்பற்றுகிறார்கள்.

நீலகிரி மரப் புறா

மயிலாடுதுறை மாவட்டத்தில், அமைந்திருக்கிற, பெரம்பூர் என்னும் கிராமத்தில், வவ்வால்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

அந்த ஆல மரங்கள் நிறைந்த பகுதியை (வவ்வால் தோப்பு) என்று அவர்கள் அழைக்கிறார்கள்.

அந்த கிராமத்தினர் இதுநாள் வரை அவர்களின் எந்த நிகழ்விற்கும் பட்டாசுகளையும், தாரை தப்பட்டை,மேளங்கள், அதிக ஒளி தரக்கூடிய ஸ்பீக்கரில் போன்ற எவற்றையும் உபயோகிக்காமல்,அழிந்து வரும் கூடிய (பழந்தின்னி வௌவால்களுக்கு) அந்த பகுதியை பாதுகாப்பானதாக மாற்றி தந்திருக்கிறார்கள்.

இதைப் போலவே, வவ்வால்களுக்காகவே, தங்களுடைய கிராமத்தை வாழ்விடமாக மாற்றி தந்த இன்னொரு பகுதியும் தமிழ்நாட்டில் இருக்கிறது.

சேலம் மாவட்டத்தில், கடையம் பட்டி அருகே இருக்கிற பள்ளப்பட்டி ஊராட்சியில் இதே அரியவகையில் இருக்கிற நகரமாயத்தின் காரணத்தினால், எண்ணிக்கையில் குறைந்து வரக்கூடிய, பழந்தின்னி வவ்வால்களுக்காக அந்த ஊராட்சி உடைய மக்கள் திருவிழாக்களின் போதும் கூட பட்டாசுகள் , ஒலிஎழுப்பிகள் பயன்படுத்துவதில்லை,என்று கிராமசப கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள்!

அந்த ஊராட்சியிலும் வவ்வால் தோப்பு என்ற பகுதி ஆல மரங்கள் இருக்கிற இடமாக இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தில், உள்ள திருப்பரங்குன்றம் பகுதியின், அருகில் இருக்கிற `சாமநத்தம் குளம்’ என்ற பகுதியிலும் அதிக அளவு பறவைகள் நாரைகள், கொக்குகள், பிளம்மிங்கோ போன்ற வெளிநாடு, உள்நாடு பறவைகள் வரத்து அதிகரிப்பதால்.

அந்த பகுதியை சார்ந்த மக்களும் பட்டாசுகளை வெடிப்பதில்லை, என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்…

பழந்தின்னி வவ்வால்

தமிழ்நாட்டில் இருக்கிற பறவைகள் சரணாலயங்களை சுற்றி இருக்கிற கிராமங்களும் இதே முடிவைத்தான் பின்பற்றுகிறார்கள்.

நம் தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்களின் விவரம் உங்கள் பார்வைக்காக:

1.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் - காஞ்சிபுரம்

2.கரிக்கிலை பறவைகள் சரணாலயம்-காஞ்சிபுரம்

3.வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம-சிவகங்கை மாவட்டம்

4.கஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

5.சித்ராங்குடி பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

6.உதயமார்த்தந்தபுரம் பறவை சரணாலயம்-திருத்திருவாரூர் மாவட்டம்

7.வாடுவூர் பறவைகள் சரணாலயம்-திருவாரூர் மாவட்டம்

8.கூற்த்தான்குளம் - கடங்குளம் பறவை சரணாலயம்-திருநெல்வேலி மாவட்டம்

9.கரைவெட்டி பறவை சரணாலயம்-அரியலூர்மாவட்டம்

10.வெல்லோடு பறவை சரணாலயம்-ஈரோடு மாவட்டம்

11.மேலசெல்வனூர்-கீலசெல்வனூர் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

12.தீர்த்தாங்கல் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

13.சகரக்கோட்டை கட்டி டேக் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்

14.புலிகட் ஏரி பறவை சரணாலயம்-திருவள்ளூர் மாவட்டம்

15.ஓசுட்டு ஏரி பறவை சரணாலயம்   விலுவுரம் -விழுப்புரம் மாவட்டம்

தமிழ்நாட்டில் காப்புக் காடுகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசே பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பதற்காக சட்டம் இருக்கிறது.

The Tamil Nadu Preservation of Private Forests Rules, 1946 (under the Act XVIII of 1946)

ஏனென்றால் காட்டுத்தீ உண்டாக இவை ஒரு காரணமாக அமைந்துவிடும், என்று ஆனால் கிராமப்புறங்களில் இந்த சட்டம் செல்லாது. ஆனாலும், அந்த ஏழை எளிய மக்களின் தூய எண்ணம் பறவைகளுக்காகவும், விலங்குகளுக்காகவும், இயற்கையின் வளம் குன்றாது இருந்திட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் எந்த பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும், சுப நிகழ்வுகளிலும், துக்க நிகழ்ச்சிகளிலும், பட்டாசுகள், மேல தாளங்கள், தாரை தப்பட்டைகள் மின்சாரம் மூலம் இயங்கும் ஸ்பீக்கர்கள், ஒலிஎழுப்பிகள், போன்றவற்றை இன்று வரை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்!

இவர்களின் எதார்த்தமான இந்த செயல், பெரிதிலும் நம்மை வியப்படைய செய்கிறது.

இனிவரும் காலங்களில், நாமும் இயற்கையை காப்பதிலும், சுற்றுப்புற சூழலை மாசடையாமல் பார்த்துக் கொள்வதும், நம்மை சுற்றி இருக்கிற விலங்குகளையும் ,பறவைகளையும் துன்புறுத்தாமல் இருந்திட, இந்த தமிழகத்தின் கிராம மக்கள், நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். நம் முன்னே வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நாலணாவுக்கு சினிமா, டூரிஸ் டாக்கீஸில் ஆடு நுழைந்த கதை!- ஜில் அனுபவம் #DiwaliCinema

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`தளபதி’ கெட்டப்பில் சுற்றிய ரசிகர்கள்! - 1991 தீபாவளி நினைவுகள் #DiwaliCinema

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தீபாவளி விடுமுறை: சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்கிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது

சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து சொந்த ஊர் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்களா? இல்லை நாளை காலை செல்ல திட்டமிடுகிறீர்களா? எப்போது பயண நேரத்தில் பாடல்களை கேட்டுக் கொண்டு செல்வோம் தானே? ஒரு மாறுதலுக்கு இந்த ப... மேலும் பார்க்க

தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்த்த அனுபவம்: அந்த காலம் முதல் இந்த காலம் வரை - உங்கள் அனுபவத்தை பகிருங்க!

விகடன் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள், கூடவே ஒரு அறிவிப்பு, தீபாவளி என்றாலே பட்டாசுகள், பலகாரங்கள், புத்தாடைகள் என கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், இந்த கொண்டாட்டங்கள் அனைத்திலும் முக்... மேலும் பார்க்க

ஜென் கிட்ஸின் 'க்ரீன்' தீபாவளி: மாறிய கொண்டாட்டங்களும் மறையாத உறவுப் பிணைப்பும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க