``எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!'’ - 'சத்தமில்லா' தீபாவளி கொண்டாடும் கிராமங்...
Dude: பிரதீப்புடன் செல்ஃபி எடுக்க முண்டியத்த மாணவர்கள்.. திடீரென சரிந்த தடுப்பு.. கோவையில் பரபரப்பு
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமீதா, ஆகியோர் நடிப்பில் எடுக்கப்பட்ட டியூட் திரைப்படம், தீபாவளி பண்டிகைக்காக திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

தற்போதுவரை டியூட் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
படக்குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் சென்று புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் டியூட் படக்குழுவின் பிரதீப் ரங்கநாதன், கீர்த்திஸ்வரன் ஆகியோர் இன்று மதியம் கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரிக்கு சென்றிருந்தனர்.

தொடர்ந்து அவர்கள் மாணவர்களை சந்தித்து உரையாடினார்கள். பிரதீப் மாணவர்கள் மத்தியில் பாடல் பாடி உற்சாகப்படுத்தினார்.
அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு பிரதீப் மற்றும் கீர்த்திஸ்வரன் மேடையில் நின்றபடி, அங்கு திரண்டிருந்த மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது சுற்றி நின்ற மாணவர்கள் தங்களின் செல்போன்களை பிரதீப்பிடம் கொடுத்து எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதில் அங்கிருந்த தடுப்புகள் திடீரென சரிந்து மாணவர்கள் சிலர் கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ‘கவனமாக இருங்கள்.’ என்று சொல்லிவிட்டு பிரதீப் அங்கிருந்து சென்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.