செய்திகள் :

தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்த்த அனுபவம்: அந்த காலம் முதல் இந்த காலம் வரை - உங்கள் அனுபவத்தை பகிருங்க!

post image

விகடன் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள், கூடவே ஒரு அறிவிப்பு,

தீபாவளி என்றாலே பட்டாசுகள், பலகாரங்கள், புத்தாடைகள் என கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், இந்த கொண்டாட்டங்கள் அனைத்திலும் முக்கிய இடம் பிடிப்பது, "தீபாவளி ரிலீஸ்" திரைப்படம் பார்க்கும் அனுபவம் தான்.

தீபாவளி நாளில் குடும்பத்துடன் திரையரங்கிற்குச் சென்று, புதிய திரைப்படம் பார்க்கும் அந்த உற்சாகமே அலாதியானது. அன்றையக் காலக்கட்டம் தொடங்கி, இன்றளவும் தொடரும் இந்த மரபு, ஒவ்வொரு தலைமுறைக்கும் வெவ்வேறு அனுபவங்களை அள்ளித் தருகிறது. உங்கள் அனுபவங்களை எங்களிடம் பகிர நீங்கள் தயாரா?

அந்தக் கால தீபாவளி... கலகலப்பான திரையரங்க அனுபவம்!

80கள், 90களில் தீபாவளி தினத்தில் வெளியாகும் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அபாரமானது. காலையிலேயே குடும்பத்துடன் குளித்து, புத்தாடை அணிந்து, பக்திப் பாடல்கள் ஒலிக்க, பலகாரங்களை சுவைத்த பின், திரையரங்கிற்கு கிளம்பும் அந்தப் பயணம் ஒரு திருவிழா போலவே இருக்கும். டிக்கெட் கவுண்டர்களில் அலைமோதும் கூட்டம், நண்பர்களுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவது, திரையரங்கிற்குள் நுழையும்போதே ஒருவித மின்சார அதிர்வு... அத்தனையும் மறக்க முடியாத நினைவுகள்.

அப்போது வந்த குடும்பப் படங்கள், நகைச்சுவை கலந்த ஆக்சன் படங்கள் என அத்தனையும் கண்டிப்பாக உங்கள் மனதில் பசுமையான நினைவுகளாய் பதிந்திருக்கும். அந்த அனுபவங்கள் மை விகடனில் பகிர ஒரு வாய்ப்பு. உங்களின் தீபாவளி நினைவுகளை கட்டுரையாக எழுதி my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

இன்றைய ஜென் கிட்ஸ் தலைமுறையினருக்கு தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் பார்க்கும் அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில், கொண்டாட்டங்கள் சமூக வலைத்தளங்களில்... என அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆகிவிட்டன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் ஸ்டோரிஸ், ட்விட்டர் விமர்சனங்கள் என படம் வெளியாவதற்கு முன்பே, "ஃபர்ஸ்ட் லுக்", "டிரைலர்" என அனைத்துமே வைரலாகி விடுகின்றன.

திரையரங்கிற்குச் சென்றாலும், செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் உருவாக்குவது, உடனடி விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது என புதிய வடிவங்களில் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. ஃபேமிலி டின்னர், நண்பர்களுடன் கேம்ஸ் நைட் என திரையரங்கிற்கு வெளியே உள்ள கொண்டாட்டங்களும் தீபாவளியின் ஓர் அங்கமாகிவிட்டன. .

கொண்டாட்டங்களின் வடிவம் மாறியிருக்கலாம். தொழில்நுட்பம் புதுமைகளைப் புகுத்தியிருக்கலாம். ஆனால், தீபாவளி நாளில் குடும்பத்துடன் திரைப்படம் பார்க்கும் அந்த அசல் உணர்வு மட்டும் என்றும் மாறுவதில்லை.

இந்த தீபாவளிக்கும் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. உங்கள் தலைமுறையின் தீபாவளி ரிலீஸ் அனுபவம் எப்படி இருந்தது? அந்தக் கால கொண்டாட்டங்களும், இப்போதைய கொண்டாட்டங்களும் உங்களுக்குள் ஏற்படுத்தும் உணர்வு என்ன? மறக்காமல் உங்கள் அனுபவங்களை கட்டுரையாக எழுதி my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

நினைவில் கொள்க: 

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

ஜென் கிட்ஸின் 'க்ரீன்' தீபாவளி: மாறிய கொண்டாட்டங்களும் மறையாத உறவுப் பிணைப்பும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நீங்கள் இன்றி அமையாது உலகு!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மயிலான்! - சிறுகதை

ஜஸ்ட் ஒன் கால் ப்ளீஸ்! - திடீரென வரும் விருந்தாளிகளுக்கு சமர்ப்பணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நட்பின் ரகசியம்: ஒரு சிறுவனும் வெள்ளை நாயும் #Straydogissue