செய்திகள் :

ஜென் கிட்ஸின் 'க்ரீன்' தீபாவளி: மாறிய கொண்டாட்டங்களும் மறையாத உறவுப் பிணைப்பும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

“இருளை அகற்றி ஒளியை வரவேற்பது” தீபாவளி பண்டிகையாகும். முன்பெல்லாம் தீபாவளி நாளுக்கு முன்பிருந்தே அதன் கொண்டாட்டம் தொடங்கிடும். அரிசியை கழுவி காய வைப்பதில் தொடங்கி, டப்பாக்களில் முறுக்கை கணக்கோடு எண்ணி வைப்பது வரை உள்ள சின்ன சின்ன வேலைகளை உறவுகள் இணைந்து செய்வார்கள்.

அப்படி குடும்பமாய் இணைந்து தீபாவளியை கொண்டாடிய தலைமுறை கடந்து தற்போது உள்ள "ஜென் கிட்ஸ்" மனதில் தீபாவளி ஏற்படுத்தி உள்ள தாக்கத்தை அறியலாம்.

தீபாவளி என்றாலே புதிய ஆடைகளை அணிந்து பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். ஆனால் இப்போதைய  தலைமுறையினர் தாங்கள் வாங்கும் புதிய ஆடைகளை அணிந்து போட்டோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற இணைய செயலிகளில் “Diwali outfit reel” என்ற கேப்சனுடன் பதிவிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள.

நம் உறவுகளுக்கு காகித அட்டைகளில் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததெல்லாம் மறைந்து இணைய செயலிகளில் 'ஹேப்பி தீபாவளி' என ஸ்டோரிஸ், ஸ்டேடஸ் வைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். 

லட்டு, மைசூர்பாக், ஜிலேபி போன்றவற்றை விரும்பாத தலைமுறை சாக்லெட் பாக்ஸ், கப் கேக், ஐஸ்கிரீம் என தங்களுக்கு பிடித்த உணவுகளை ஆன்லைனில்  ஆர்டர் செய்து சுவைத்து மகிழ்கிறார்கள்.

"கீரின் தீபாவளி" என்னும் பெயரில் ஒலி மற்றும் காற்றை மாசுபடுத்தும் வெடிப்பொருட்களை பயன்படுத்தாமல், சுற்றுச்சூழலை பாதுக்காக்க எல்.இ.டி. லைட்களால் வீட்டை அலங்கரித்தல், டிரோன் ஷொக்கள் நடத்துதல் என வண்ண ஒளிகளால் கொண்டாடுகிறார்கள். மேலும் பேமிலி டின்னர், கேம்ஸ் நைட் என பலரும் நட்சத்திர விடுதிகளிலும், திரையரங்குகளில் புது படம் பார்த்தல் என குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கிறார்கள். 

முந்தைய தலைமுறையினர் கொண்டாட்ட மனநிலையோடு அனுபவித்த தீபாவளி பண்டிகை, இன்றைக்கு ஒரு விடுமுறை நாளாக இருப்பதோடு உறவுகளை சேர்த்திடும் உணர்வு நாளாகவும் மாறியுள்ளது. ஆடம்பரமில்லாமல் சகஜமாய் கொண்டாடப்படும் தீபாவளி நாளில் பாதுகாப்போடு நாம் அனைவரும் இருப்போம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்த்த அனுபவம்: அந்த காலம் முதல் இந்த காலம் வரை - உங்கள் அனுபவத்தை பகிருங்க!

விகடன் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள், கூடவே ஒரு அறிவிப்பு, தீபாவளி என்றாலே பட்டாசுகள், பலகாரங்கள், புத்தாடைகள் என கொண்டாட்டங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், இந்த கொண்டாட்டங்கள் அனைத்திலும் முக்... மேலும் பார்க்க

இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நீங்கள் இன்றி அமையாது உலகு!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மயிலான்! - சிறுகதை

ஜஸ்ட் ஒன் கால் ப்ளீஸ்! - திடீரென வரும் விருந்தாளிகளுக்கு சமர்ப்பணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நட்பின் ரகசியம்: ஒரு சிறுவனும் வெள்ளை நாயும் #Straydogissue