BB Tamil 9 Day 17: ‘ஏண்டா.. என் சாப்பாட்டை சாப்பிட்டே?” - திவாகரிடம் பாருவின் ரு...
அடிலெய்டில் 17 வருடங்களாகத் தோற்காத இந்தியா; முற்றுப்புள்ளி வைக்குமா ஆஸி., வெற்றி யாருக்கு?
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
அக்டோபர் 19-ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டு (Adelaide) மைதானத்தில் இன்று (அடிலெய்டு 23) நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு அடிலெய்டு மைதானத்தில் இந்தியாவுக்கெதிராக ஆஸ்திரேலிய வெற்றிபெறுமா அல்லது அடிலெய்டில் இந்தியாவின் 17 வருட வெற்றிநடை தொடருமா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக கடந்த 2008-ல் காமன்வெல்த் முத்தரப்பு தொடரில் (இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா) பிப்ரவரி 17-ம் தேதி அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியை கடைசியாக ஆஸ்திரேலிய வென்றது.
அதன்பிறகு இந்த 17 வருடங்களில் 2012, 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவை ஆஸ்திரேலியா எதிர்கொண்டது.
அந்த இரு போட்டியிலும் இந்தியாவே வென்றது. அந்த இரண்டு போட்டியில் முதல் போட்டியில் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் (92 ரன்கள்), இரண்டாவது போட்டியில் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் (104 ரன்கள்) ஆட்ட நாயகன் விருது வென்றனர்.
இந்திய அணி இந்த இரண்டு போட்டிகள் உட்பட 2008-க்குப் பிறகு மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி அவையனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இதில் கோலி தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் சதமடித்திருப்பதால் நாளை ஹாட்ரிக் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகியிருக்கிறது.
இந்தத் தொடரின் மூலம் கிட்டத்தட்ட அரை வருடத்துக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய கோலியும் (0), ரோஹித்தும் (8) முதல் போட்டியில் பெரிதாக ரன் அடிக்காததால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

ஏற்கெனவே, ``2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலி, ரோஹித் இடம்பெறுவர்களா என்பது பற்றி இப்போதே கூற முடியாது" என பி.சி.சி.ஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார் கூறிவிட்டதால், இனிவரும் போட்டிகளில் இவ்விருவரும் சிறப்பாக ஆடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஒருவேளை இப்போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் அடிலெய்டில் இந்தியாவின் 17 வருட வெற்றிநடை முடிவுக்கு வருவதோடு மட்டுமல்லாமல் இந்தத் தொடரையும் இந்தியா இழக்க நேரிடும்.
இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2019-ல் ஒருநாள் தொடரை வென்றிருந்தது. அத்தொடரில் தோனிதான் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார்.
அதன்பிறகு, 2020-ல் ஆஸ்திரேலியாவில் இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது.
இதனால், 6 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
~ Dhoni's Adelaide 55*(54) against Aus after 160-3 in a chase of 299. pic.twitter.com/EgtOsbo2zx
— चक्र⁷ (@Ch7kraveer_) October 19, 2025
எனவே இவற்றுக்கெல்லாம் முக்கியமான நாளைய அடிலெய்டு போட்டியில் நிச்சயம் பரப்பரப்புக்குப் பஞ்சமிருக்காது.
நடப்பு மகளிர் உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்தை இந்தியா வீழ்த்தினால், அரையிறுதிச் சுற்றுக்கான நான்கு இடங்களில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.