செய்திகள் :

'ரஜினி சார் நம்பி வந்தால் நம்பிக்கையை காப்பாற்றுவேன்' - மாரி செல்வராஜ்

post image

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில்  உருவான ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ், நடிகர்கள் பசுபதி, அமீர், ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று கோவையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.

பைசன் காளமாடன்

அப்போது மாரி செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்னுடைய படங்கள் அனைத்தும் மக்களை நம்பி எடுக்கப்பட்டவை. அந்த வகையில் இந்த படத்துக்கும் மக்கள் ஆதரவு நன்றாக இருப்பது மகிழ்ச்சி.

பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறார்கள். என்னுடைய படங்கள் இவ்வாறு இருக்கும், என்னுடன் வேலை செய்வது இவ்வாறு தான் இருக்கும் என்று என்னை நம்பி அவர் வந்தால் அவருடைய நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். சமூகத்தில் ஜாதிகளை மாத்திரை போடுவது போன்று காலி செய்துவிட முடியாது.

இயக்குநர் மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

ஜாதி என்பது தமிழ்நாட்டில் ஏன் இந்தியா முழுவதும் ஒரு வாழ்வியல் முறையாக உள்ளது. நான் மட்டுமல்ல அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலரும் ஜாதிக்கு எதிராக வேலை செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

சினிமாவிலும் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம்.” என்றவரிடம், ‘உங்களின் அனைத்து படங்களிலும் ஒரு விலங்கை குறிப்பிட்டு, அதனை கொல்வது போன்று படம் எடுக்கப்படுவது’ குறித்து செய்தியாளர்கள் கேள்வி  எழுப்பினர். அதற்கு மாரி செல்வராஜ், “மனிதனை கொல்வதற்கு பயமாக உள்ளது.

மாரி செல்வராஜ்

வணிக ரீதியான படங்களில் எவ்வளவு மனிதர்களை கொன்றாலும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். நான் சமூகத்தையும், உண்மையையும் வைத்து படம் எடுக்கிறேன். எனவே மனிதர்கள் இறப்பது போல படம் எடுத்தால் அது என்னுடைய பொறுப்பு. அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.” என்றார்.

தேவாவின் சகோதரர் இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷ் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.ஆரம்ப காலகட்டத்தில் சபேஷ் தனது இன்னொரு சகோதரர் முரளியுடன் சேர்ந்து தேவாவுடன் உதவி இசையமைப்பாளராகப் பல படங்களில் இணைந்து ... மேலும் பார்க்க

நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

நடிகை மனோரமாவின் மகன் பூபதி மூச்சு திணறல் காரணமாக இன்று (அக்.23) காலை காலமானார்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் மனோரமா. குணச்சித்திர கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்கள் என ... மேலும் பார்க்க

``திண்ணையில் கிடந்தவனுக்கு" - கிண்டல் செய்த பதிவுக்கு 'நண்பா' என சூரி கொடுத்த பதில்

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான படம் மாமன். இந்தப் படத்துக்குப் பிறகு, இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் `மண்டாடி' திரைப்படத்தில் நடிகர் சூரி ந... மேலும் பார்க்க

`கடவுளுக்கே விமர்சனம் இருக்கும்போது, திரைப்படத்திற்கு விமர்சனம் இல்லாமல் இருக்காது' -அமீர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெளியாகியிருக்கும் படம் 'பைசன்'. இந்நிலையில் 'பைசன்' குறித்து பத்திரிகைய... மேலும் பார்க்க

டியூட்: ``இங்க ஒரு பெரியவர் இருந்திருக்கார் அவர் வழியிலதான்'' - பெரியார் பற்றி பேசிய இயக்குநர்

அக்டோபர் 17ம் தேதி வெளியான பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ (Dude) திரைப்படம் 95 கோடிகளுக்கும் மேல் வசூல் குவித்துள்ளது. இதன் வெற்றிவிழா இன்று நடைபெற்றது.பிரதீப்புடன் சரத்குமார், ரோஹிணி, மமிதா பைஜு மற்றும... மேலும் பார்க்க

Bison: ``இவரால் மட்டுமே பயப்படாமல் எடுக்க முடியும்'' - இரா.சரவணன் Review

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம் ‘பைசன்’. கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.துருவ் விக்ரமுடன் நடித்த பசுபதி, அனுபமா பரமே... மேலும் பார்க்க