செய்திகள் :

இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா?

post image

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது... பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும், இன்னும் அதில் இழுபறி நீடித்து வருகிறது.

என்ன பேச்சுவார்த்தை?

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது ஒப்பந்தமானால், இருதரப்பும் ஏற்றுமதி, இறக்குமதிகள் செய்வதில் பெரிய வரிச்சலுகைகள் கிடைக்கும். மேலும், இருதரப்பிற்குமே வர்த்தக ரீதியிலான உறவு நன்கு அமையும்.

ஆனால், பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும் இருதரப்பினருக்கும் இடையே சில வித்தியாசங்கள் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடந்தது.

வர்த்தகம்
வர்த்தகம்

என்ன பிரச்னை?

இருதரப்பும் தங்களுக்கு தேவையான வரி சலுகைகள், சந்தை அனுமதி, வர்த்தகம் மற்றும் முதலீடு அனுகூலங்களைப் பேசி வருகிறது. இதில் தான் சிக்கல் எழுந்துள்ளது.

ஆட்டோமொபைல், விவசாயம், வைன் போன்றவற்றிற்கு இந்திய சந்தை அனுமதியை நாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம். ஆனால், இவை இந்தியா பெரும்பாலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துறைகள் ஆகும். இவைகளுக்கு தனி கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அடுத்ததாக, முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை வரையறைகள். இந்த இரண்டிலும் ஒரு முடிவை எட்ட முடியாத சூழல் நீடித்து வருகிறது.

ப்ளஸ்

இன்னொரு பக்கம், இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைத் தொகுக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தப் பேச்சுவார்த்தையின் மிகப்பெரிய ப்ளஸ் ஆகும்.

இந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியம் கேட்கும் சந்தை அனுமதியைக் கொடுத்தால், அது இந்தியாவிற்குள்ள உற்பத்தியைப் பாதிக்கும்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்கு இந்திய சந்தையிலும், இந்தியாவில் செய்யப்படும் தங்களது உற்பத்திகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

இதற்கேற்ற விஷயங்களைத் தான் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்து வைக்கிறது.

ஏன் இது முக்கியம்?

ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. கடந்த 2024–2025 நிதியாண்டில், இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 75.85 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா கடந்த நிதியாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 60.68 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இறக்குமதிகளைச் செய்துள்ளது. ஆக, இரண்டுக்கும் இடையே, 2024–25 நிதியாண்டில் மொத்தமாக 136.53 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடந்துள்ளது.

இந்தத் தரவுகள் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கே மட்டுமே பொருந்தும்.

பியூஷ் கோயல்

இந்தப் பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இழுபறி தொடர்ந்து நீடித்து வருவதால் இது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது.

இந்த நிலையில் தான், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸுக்கு செல்லவிருக்கிறார். இது பேச்சுவார்த்தையை பாசிட்டிவாக மாற்றும் என்று நம்பப்படுகிறது.

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

``சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு'' - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

தூய்மைப் பணியாளர்கள் சென்னையில் கடந்த ஆகஸ்ட்டில் தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரண்டு வாரம் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.13 நாள்களாகப் போராட்டக்காரர்களை அலட்சியப்ப... மேலும் பார்க்க

`2.5 மில்லியன் இந்தியர்களின் பெருமூச்சு' - கஃபாலா சட்டத்தை ரத்து செய்த சவூதி இளவரசர்!

வெளிநாட்டு மோகம்விரைவில் பணக்காரனாக வேண்டும், கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக 1970, 80, 90-களில் வெளிநாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.குறிப்பாக வளைகுடா நாடுகளான ... மேலும் பார்க்க

ரூ.13,000 கோடி கடன் மோசடி: வைர வியாபாரி மெஹுல் சோக்சிக்காக சகல வசதியுடன் தயாராக இருக்கும் சிறை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திரும்ப கொடுக்காமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி ஆகியோர் வெவ்வேறு நாடுக... மேலும் பார்க்க

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி'இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்' - இது கடந்த இரண்டு - மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று.இன்னொரு பக... மேலும் பார்க்க

வம்பிழுத்த ‘இன்பமான’ எம்.பி; வறுத்தெடுத்த தலைமை டு இடத்தை மாற்றிய கதைசொல்லியார்! | கழுகார் அப்டேட்ஸ்

கடுப்பில் சூரியக் கட்சி நிர்வாகிகள்!சுயநலத்தால் தொகுதியைத் தாரைவார்க்கும் ‘சாமி’ சீனியர்..?தேர்தல் நேர உள்ளடிகள், பின்னலாடை மாவட்டச் சூரியக் கட்சிக்குள் தற்போதே சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்த மாவட்... மேலும் பார்க்க

`இப்போதுகூட வேகமாக நடக்கவில்லை'- கொள்முதல் அலட்சியம்; தேங்கிக் கிடக்கும் நெல்; துயரில் விவசாயிகள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறித்த நேரத்தில் மேட்டூர் திறக்கப்பட்டது, போதுமான அளவில் விவசாயத்திற்... மேலும் பார்க்க