Aaryan: `` என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது!" - பட விழாவில்...
BB Tamil 9: `கை வைக்கிற வேலைய வச்சிக்காத!’ - அடித்துக்கொள்ளும் கம்ருதீன், துஷார்
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய (அக்.23) நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கம்ருதினுக்கும் துஷாருக்கும் மோதல் ஏற்படுகிறது. "எனக்கான இடத்தை விடு. பக்கத்துல நிக்காத'னு கம்ருதீன் சொல்ல", "இது உங்க வீடு இல்ல" என துஷார் சொல்கிறார்.
பேசிக்கொண்டு இருக்கும்போதே கம்ருதீன் கையை வைத்து துஷாரைத் தள்ள துஷாரும் கம்ருதீனுடனும் மோதுகிறார்.