செய்திகள் :

'சாதியப் பிரச்னைகளை படமாக எடுக்கக் கூடாது' - நயினார் நாகேந்திரன்

post image

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கோவை வரவுள்ளார். அவருக்கு கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்துகிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

நயினார் நாகேந்திரன்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தமிழரை துணை ஜனாதிபதியாக்கிய பெருமை பாஜகவுக்கு உள்ளது. டெல்டா மாவட்டத்தின் சொந்தக்காரர் என தமிழக முதலமைச்சர் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார். உண்மையில் டெல்டா மீது அக்கறையில்லாமல் செயல்படுகிறார்.

12 லட்சம் ஹெக்டேர் நீரில் மூழ்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வைத்து பராமரிக்க முடியாத அவல நிலை உள்ளது. திமுகவினர் உண்மையைப் பேசுவதில்லை. பருவ மழைக்கு முன்பாகவே மத்திய அரசு ரூ. 950 கோடி நிதி கொடுத்துள்ளனர். எங்குமே மழை முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறவில்லை.

டெல்டா விவசாயம்

தேர்தல் அறிக்கையில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. வெகுஜன  மக்களின் விரோத அரசாக உள்ளது. வெகு விரைவில் இந்த அரசு வீட்டுக்குச் செல்லும் காலம் வரும். சட்டமன்றத்தில் கேட்கும் கேள்விக்கும், பதிலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

எனக்கு பைசல் பண்ணத்தான் தெரியும். பைசன் படம் தெரியாது. ஜாதி ரீதியான பிரச்னைகளை படமாக எடுப்பது சரியில்லை. விஜய் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரா என்பதை அவரிடம் கேட்க  வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. ஆனால், தமிழக அரசு  செய்த சாதனை ரூ.890 கோடிக்கு மது விற்பனை செய்தது மட்டும்தான்.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக்

கடந்தாண்டை விட ரூ.150 கோடிக்கு விற்பனை அதிகம் என்பதுதான் இந்த அரசின் சாதனை. விரைவில் இது மாற்றி அமைக்கப்படும். பிஎம் ஶ்ரீ திட்டத்தில் கேரள அரசு சேருவது, மக்கள் நலனில் அந்த அரசு அக்கறையுடன் இருப்பதைக் காட்டுகிறது. “ என்றார்.

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி'இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்' - இது கடந்த இரண்டு - மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று.இன்னொரு பக... மேலும் பார்க்க

வம்பிழுத்த ‘இன்பமான’ எம்.பி; வறுத்தெடுத்த தலைமை டு இடத்தை மாற்றிய கதைசொல்லியார்! | கழுகார் அப்டேட்ஸ்

கடுப்பில் சூரியக் கட்சி நிர்வாகிகள்!சுயநலத்தால் தொகுதியைத் தாரைவார்க்கும் ‘சாமி’ சீனியர்..?தேர்தல் நேர உள்ளடிகள், பின்னலாடை மாவட்டச் சூரியக் கட்சிக்குள் தற்போதே சூட்டைக் கிளப்பியிருக்கிறது. அந்த மாவட்... மேலும் பார்க்க

`இப்போதுகூட வேகமாக நடக்கவில்லை'- கொள்முதல் அலட்சியம்; தேங்கிக் கிடக்கும் நெல்; துயரில் விவசாயிகள்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறித்த நேரத்தில் மேட்டூர் திறக்கப்பட்டது, போதுமான அளவில் விவசாயத்திற்... மேலும் பார்க்க

இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா?

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது... பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும், இன்னும் அதில் இழுபறி நீடித்து வருகிறது.என்ன பேச்சுவார்த்தை?இந... மேலும் பார்க்க

Bihar: தொகுதி பங்கீடு சிக்கல் டு முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி வரை - பீகார் தேர்தல் அப்டேட்ஸ்!

பீகார் தேர்தல்: பீகார் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டத் தேர்தல் நவம்பர் 06-ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெறும். வாக்கு... மேலும் பார்க்க

``விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம், முறைகேடு'' - திமுக-வுக்கு சீமானின் 9 கேள்விகள்

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கனமழையால் டெல்டா மாவட்ட நெல் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.ஒருபக்கம் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்க... மேலும் பார்க்க