கே.பாப்பாரப்பட்டி: `இந்த ரோட்டுல நடந்து வர்றதே நாளும் போராட்டமா இருக்கு!' - சாலை...
தாஜ் உணவகம்: 'நான் சம்மணங்கால் போட்டு அமர்வது உங்களுக்கு பிரச்னையா?' - ஷ்ரதா பதிவு
'யுவர் ஸ்டோரி' என்னும் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் ஷ்ரதா.
இவர் தீபாவளியை முன்னிட்டு தன்னுடைய சகோதரியுடன் டெல்லி தாஜ் ஹோட்டலில் உள்ள ஹவுஸ் ஆஃப் மிங் உணவகத்திற்கு சென்றிருக்கிறார்.
அங்கே அவர் சம்மணங்கால் போட்டு அமர, அதற்கு அந்த உணவகத்தின் மேனேஜர் அது பிற வாடிக்கையாளருக்கு தொந்தரவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஷ்ரதா தனது எக்ஸ் பக்கத்தில், "நாம் மிகவும் கடினமாக உழைத்து பணம் சம்பாதிக்கிறோம். தீபாவளிக்கு ஸ்பெஷலாக எதாவது செய்வோம் என்று தான், இன்று இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்தோம்.
இந்த உணவகத்தின் மேனேஜர் வந்து, நான் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருப்பது ஒரு வாடிக்கையாளருக்கு பிரச்னையாக உள்ளது என்று கூறினார்.
இது ஒரு 'ஃபைன் டைனிங் உணவகம்' என்று எனக்கு புரிகிறது. பெரிய பணக்காரர்கள் வருவார்கள். அவர்கள் ஷூ அணிந்திருப்பதால் காலை மேலே போட்டு அமரமாட்டார்கள்.
ஆனால், நான் இன்று செருப்பு தான் போட்டு வந்துள்ளேன்... மிகவும் கண்ணியமாக உடை அணிந்துள்ளேன். அப்படியிருக்கையில் நான் உட்கார்ந்த விதம் குறித்து பேசியதை நான் ஆட்சேபிக்கிறேன்.
இது ஒருவருக்கு பிரச்னையாக உள்ளது என்றால், இன்னமும் நாம் பணம், கலாசாரம், வர்க்கம் ஆகியவற்றிற்குள் அடைப்பட்டிருக்கிறோம் என்பதை காட்டுகிறது.
நான் உழைத்து சம்பாதித்த காசில் இங்கே பில் கட்ட போகிறேன். இதில் என்ன பிரச்னை?
एक आम इंसान, जो मेहनत करके, अपना पैसा कमा कर, अपनी इज़्ज़त के साथ ताज होटल में आता है — उसे आज भी इस देश में ज़लील और अपमानित होना पड़ता है।
— Shradha Sharma (@SharmaShradha) October 21, 2025
और मेरी गलती क्या है? सिर्फ़ ये कि मैं बैठ गई एक “regular padmasana style” में?
क्या ये मेरी गलती है कि ताज मुझे सिखा रहा है कि कैसे बैठना… pic.twitter.com/vKBYjg8ltb
இதுவரை நான் மிகவும் மதிக்கப்பட்ட தாஜில் இப்படி நடந்தது எனக்கு வருத்தமாக உள்ளது. ரத்தன் டாடா அவரே என்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அப்படியிருக்கையில் தாஜில் எனக்கு இப்படி நடந்தது மிகவும் வருத்தமாக உள்ளது" என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
பலர் வந்துபோகும் இடத்தில் இவர் இப்படி அமர்ந்தது தவறு என்றும்... தவறு இல்லை என்றும் இந்த வீடியோவுக்கு கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
இது குறித்த உங்கள் கருத்து என்ன மக்களே?