Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையு...
`மனம்போல வாழ்வு பெற நிலக்கோட்டை அம்மையநாயக்கனூர் மாரி அருள்வாள்' திருவிளக்கு பூஜை; அனுமதி இலவசம்
2025 நவம்பர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல் நிலக்கோட்டை அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள்...
முன்பதிவுக்கு: 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

மதுரை அரசை நிர்வகித்த விசுவநாத நாயக்கர் அதை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் (திண்டுக்கல்-நிலக்கோட்டை) அம்மையநாயக்கனூர் ஒரு பாளையமாக இருந்து பல வரலாற்று நிகழ்வுகளை நடத்தியுள்ளது என்கிறது வரலாறு. இங்குள்ள கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் 800 ஆண்டுகள் பழைமையானது. சிவ-விஷ்ணு மூர்த்தங்களை ஒருங்கே ஒரே கருவறையில் கொண்ட பெருமை கொண்டது. மேலும் அம்மையநாயக்கனூர் பாளையத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் சக்தி வழிபாடு இந்த ஊர் மக்களை பகையிலிருந்தும் கொடிய நோயிலிருந்தும் காத்து வந்துள்ளது என்கிறார்கள். குறிப்பாக அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் 200 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவள் என்கிறார்கள்.

மதுரைக்கு காவலாக இருந்த இந்த பாளையத்து வீரர்களுக்கு வெற்றி தரும் கொற்றவை தெய்வமாகவும் இந்த ஊரை பஞ்சம், பசி, நோய்கள் தாக்காதவாறு காத்து நின்றவளும் இந்த அன்னையே என்கிறார்கள். அந்நியர் ஆட்சி காலம் முதல் கொண்டு இன்று வரை இந்த ஊரையும் மக்களையும் காத்து வரும் இந்த சுயம்பு முத்துமாரியம்மனின் கருவறைத் தோற்றத்தைக் கண்டாலே மெய் சிலிர்த்துவிடும். சுயம்புவாக ஒரே பாறையில் லிங்கம் போன்ற வடிவில் அநேகக் கண்களோடு காட்சி தருகிறாள் இந்த அன்னை. 'எங்க ஆத்தாளுக்கு உடம்பெல்லாம் கண்ணுங்க. எங்க எது நடந்தாலும் அது ஆத்தாளுக்கு தெரியும். அவளை மீறி எதுவும் நடக்காது. தாயேன்னு இங்கு வந்து நின்னு அழுதா போதும். நீதி தந்து நிவாரணமும் தருவாள். தன் பக்தர்களுக்கு யார் தொந்தரவு செய்தாலும் இவ நின்னு நியாயம் செய்வாள்' என்று ஊர் மக்கள் சிலிர்ப்போடு சொல்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் இந்த வட்டாரத்துக்கு இவளே நீதிபதி; இவளே காவல் அதிகாரி; இவளே வாரி வழங்கும் வள்ளல் என்றே சொல்லலாம்.
இத்தனை சிறப்பான ஆலயத்தில் உலக நன்மைக்காகவும் உங்களின் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம். 2025 நவம்பர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை நிலக்கோட்டை அம்மையப்பநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்! அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 044-66802980/07