செய்திகள் :

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது ஏன்? - `வெளிப்படைத்தன்மை முக்கியம்' ஜான்வி கபூர் ஓபன் டாக்

post image

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனது காதலனை அழைத்து செல்வது வழக்கம். ஜான்வி கபூர் தனது அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

இது குறித்து நடிகை காஜோல் மற்றும் டிவிங்கிலின் டிவி ஷோவில் கலந்து கொண்டு பேசும்போது ஜான்வி கபூர் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஶ்ரீதேவி, ஜான்வி கபூர்
ஶ்ரீதேவி, ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் கூறுகையில்:
"எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வரக்கூடிய செய்திகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.

ஆனால் இந்த ஆலோசனையை இளம்பெண்கள் ஏற்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. 'உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் எதையும் செய்' என்பதில் நான் பெரிய அளவில் நம்பிக்கை கொண்டவள்.

அனைத்து விஷயத்திலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். நான் மிகவும் புத்திசாலி, பழமைவாதி, மேலும் நான் செய்வது சரியானது என்று நினைப்பவள்.

நிச்சயமாக, எனக்கு என் அம்மாவின் வழிகாட்டுதல் இருந்தது, அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மேலும் ஒரு இளம் பெண் இதுபோன்ற வீடியோவைப் பார்த்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால், அதில் ஏதாவது தவறு நடந்தால் அது மோசமாகிவிடும். இவ்விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

தனது அம்மா தான் நடிக்க வேண்டும் என்று ஒருபோதும் விரும்பவில்லை; என் மீதான பாதுகாப்பைப் பற்றி சிந்தித்தார். எங்களுக்கு அனைத்து வழியிலும் நாங்கள் விரும்பிய அனைத்தும் கிடைத்தது.

ஜான்வி கபூர்

அதே நேரத்தில், நான் நடிகையாகக் கூடாது என்பதில் என் அம்மா கண்டிப்பாக இருந்தார். மக்கள் என்னை உடலில் முடி, இரட்டை சடை மற்றும் மீசையுடன் பார்த்தாலும் பரவாயில்லை என்பது போல் இருந்தார்.

இது எனக்கு மிகவும் மோசமான கவலையாக இருந்தது, ஏனென்றால் என் டீனேஜ் பருவத்தில் சமூக ஊடகங்களில் இது பெரிதாக விவாதிக்கப்பட்டது. எனவே தான் அறுவை சிகிச்சை செய்தேன்" என்று தெரிவித்தார்.

தன் காதலரைப் பற்றியும் ஜான்வி கபூர் பேசினார். காதலர் சிகர் பஹாரியா நன்றாக குதிரை சவாரி செய்யக்கூடியவர் என்று கூறினார். ஜான்வி கபூர் தனது உதட்டை சரி செய்ய buffalo-plasty எனப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

மகளை அறிமுகப்படுத்திய தீபிகா - ரன்வீர் தம்பதி; வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகர்ந்துள்ளனர். செப்டம்பர் 2024-ல் துவா பிறந்தார். தீபிகா பட... மேலும் பார்க்க

Alia Bhatt: "பால்வெளி தெருவில் அமுதூறிய முகமே!" - தீப ஒளியில் மின்னும் ஆலியா பட் | Photo Album

Alia bhatt: போலி பில்கள் தயாரிப்பு; நடிகையிடம் ரூ.77 லட்சம் மோசடி செய்த முன்னாள் உதவியாளர் கைது மேலும் பார்க்க

Govardhan Asrani: "பல தலைமுறை பார்வையாளர்களை மகிழ்வித்தவர்"- மோடி இரங்கல்

பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கோவர்தன் அஸ்ரானி, உடல்நலக் குறைவால் இன்று (அக்.21) தனது 84வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிக... மேலும் பார்க்க

Shah Rukh Khan: ``சல்மான் கான் மற்றும் ஆமிர் கானை பெரிதும் மதிக்கிறேன்!" - ஷாருக் கான்

பாலிவுட்டின் மூன்று கான்களும் சமீபத்தில் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த 'ஜாய் ஃபோரம்' நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். Shah Rukh Khan, Salman Khan & Aamir Khanஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் என... மேலும் பார்க்க

Bollywood: ``நாங்கள் இணைந்து நடிக்கும் படம் ?'' - ஒரே மேடையில் பாலிவுட்டின் கான்கள்!

பாலிவுட்டின் மூன்று கான்களும் ஒரே மேடையில் ஒன்று கூடியிருக்கிறார்கள். சமீபத்தில் சவுதி அரேபியாவில் ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் என மூவரும் ஒரே நிகழ்வுக்கு வருகை தந்து தங்களுக்குள் இருக்கும் ப... மேலும் பார்க்க

மிஸ் இந்தியா: "கால் ஸ்லிப் ஆகுறதெல்லாம்" - ஐஸ்வர்யா ராயைத் தோற்கடித்து சுஷ்மிதா சென் வென்றது எப்படி?

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகை சுஷ்மிதா சென்னும் 1994ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில் நடிகை சுஷ்மிதா சென் அழகிப்பட்டத்தை வென்றார். அந்நேரத்தில் மாடலிங்கில் இருந்த ந... மேலும் பார்க்க