Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பா...
Govardhan Asrani: "பல தலைமுறை பார்வையாளர்களை மகிழ்வித்தவர்"- மோடி இரங்கல்
பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கோவர்தன் அஸ்ரானி, உடல்நலக் குறைவால் இன்று (அக்.21) தனது 84வது வயதில் காலமானார்.அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் திரு கோவர்தன் அஸ்ரானியின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், "திரு கோவர்தன் அஸ்ரானி அவர்களின் மறைவால் மிகவும் வருந்தினேன்.
ஒரு திறமையான பொழுதுபோக்குக் கலைஞர் மற்றும் பன்முகக் கலைஞரான அவர் பல தலைமுறை பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
குறிப்பாக தனது மறக்க முடியாத நடிப்பாற்றல் மூலம் எண்ணற்றோர் வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியையும் நகைச்சுவையையும் சேர்த்தார்.
இந்திய சினிமாவுக்கு அவரின் பங்களிப்பு எப்போதும் போற்றப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி."