பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை`ஹேமா ராஜ்குமார்' லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ் | Al...
Shah Rukh Khan: ``சல்மான் கான் மற்றும் ஆமிர் கானை பெரிதும் மதிக்கிறேன்!" - ஷாருக் கான்
பாலிவுட்டின் மூன்று கான்களும் சமீபத்தில் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த 'ஜாய் ஃபோரம்' நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர் கான் என மூவரும் இணைந்து தங்களுக்குள் இருக்கும் பரஸ்பர நட்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பகிர்ந்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வில் இந்திய சினிமா குறித்து ஷாருக் கான் பேசுகையில், "நான் நல்லவனாக, கெட்டவனாக, மகிழ்ச்சியானவனாக, ஏழையாக அல்லது பணக்காரனாக நடித்தாலும், எந்தக் கதாபாத்திரத்தை நாங்கள் ஏற்றாலும், கலாச்சார அம்சமும் உணர்ச்சி தொடர்பும், மொழி மற்றும் தளங்களின் எல்லைகளைத் தாண்டி செல்கிறது என்று நினைக்கிறேன்.
நான் எப்போதும் மக்களுக்கு பொழுதுபோக்கு கிடைப்பதை உறுதி செய்கிறேன். மேலும் கடந்த 35 ஆண்டுகளாக என் ரசிகர்கள் எனக்கு அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

நான் சல்மான் கான் மற்றும் ஆமிர் கானை பெரிதும் மதிக்கிறேன். அவர்கள் ஆர்வமூட்டுபவர்களாகவும் உத்வேகம் அளிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் நன்றியை உணர வைக்கிறது," என்றவர் சல்மான் கானை நோக்கி, "சல்மான், மன்னிக்கவும். சல்மானின் குடும்பம் என் குடும்பம். ஆமிரின் குடும்பம் என் குடும்பம். அதனால் நானும் ஒரு திரைப்படக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்." எனப் பேசியிருக்கிறார்.