Pink October: தயக்கத்தையும் கூச்சத்தையும் தள்ளி வையுங்கள்; மார்பகப் புற்றுநோயையு...
US: 2 மாதங்களில் 1 டிரில்லியன் டாலர் அமெரிக்க கடன் அதிகரிப்பு - என்ன காரணம்?
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவின் கடன் 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கடன் 37 டிரில்லியன் டாலராக இருந்தது. அது மிக மிக வேகமாக வளர்ந்து அக்டோபர் மாத நிலவரப்படி, தற்போது 38 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது விதித்த வரியால் அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி வருமானம் என்று கூறுகிறார்.

இவ்வளவு கடன் ஏன்?
அமெரிக்காவின் பட்ஜெட் அதன் வருமானத்தைத் தாண்டியதாக இருக்கிறது.
அடுத்ததாக, சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவத்திற்கான அமெரிக்கா அதிகம் செலவளிக்கிறது.
ட்ரம்ப் சமீபத்தில் அமெரிக்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளார். இதனால், அமெரிக்க அரசின் வருமானம் பெரியளவில் குறைந்துள்ளது.
இதையெல்லாம் தாண்டி, தற்போது அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் இருந்து வருகிறது. இது கடந்த மாதத்தின் பாதியில் தான் தெடங்கியிருந்தாலும், இதன் பங்கு கணிசமாக நிச்சயம் உள்ளது.