செய்திகள் :

Lokah Chapter 1: 'லோகா'வின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு ; வெளியான மோலிவுட் அப்டேட்!

post image

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம்.

இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருந்தது. தற்போது ரூ. 200 கோடிக்கு மேலான வசூலைத் தாண்டிச் சென்று வரவேற்பைப் பெற்றது.

Lokah Chapter 2 அப்டேட்
Lokah Chapter 2 அப்டேட்

கள்ளியன்காட்டு நீலியாகத் தொடங்கியிருக்கும் இதன் முதல் அத்தியாயத்தின் இறுதியில் துல்கர் சல்மான், டொவினோவின் கதாபாத்திரங்களும் அடுத்தடுத்த பாகத்திற்கான தொடர்ச்சிக் கதைகளுக்கு அடித்தளமிட்டுச் சென்றிருக்கின்றன. மூத்தோனாக மம்மூட்டி நடிப்பதாகவும் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.

இதன் இரண்டாம் அத்தியாயம் டொவினோவின் கதையை மையப்படுத்தியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 'Lokah Chapter 2' பற்றிய அறிவிப்பு வீடியோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

Lokah Chapter 1: Chandra Review: ஒரு டஜன் கேமியோ! மல்லுவுட்டின் புது சூப்பர்ஹீரோ யுனிவர்ஸ் எப்படி?

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த ' Lokah Chapter 1' திரைப்படம் 'Jiohotstar' ஓடிடி தளத்தில் அக்டோபர் 31 தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கள்ளியன்காட்டு நீலியின் அதிரடி ஆக்‌ஷனை தியேட்டரில் பார்க்கத் தவறியவர்கள் ஓடிடியில் பார்க்கலாம்.

Lokah Chapter 1: தீபாவளிக்கு 'லோகா'வின் ஓடிடி ரிலீஸ்; வெளியான மோலிவுட் அப்டேட்!

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம்.இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடி... மேலும் பார்க்க

Haal: ``பீப் பிரியாணி' காட்சிக்கு சென்சார் கட்" - நீதிமன்றத்தில் இயக்குநர் போர்கொடி!

நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான வீர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஹால். இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்த நிலையில், இந்தப் படத்து... மேலும் பார்க்க

Mohanlal: "16 ஆண்டுகளாக ராணுவத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன்" - மோகன்லாலைக் கௌரவித்த இந்திய ராணுவம்

சமீபத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருந்தது. பெருமைமிகு இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்துகளைத் தெரிவித்தது. மலையாள சினிம... மேலும் பார்க்க

சென்னை: துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; பின்னணி என்ன?

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார் துல்கர்... மேலும் பார்க்க

``20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெற்றபோது..." - அடூர் கோபாலகிருஷ்ணன்

சமீபத்தில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருந்தது. பெருமைமிகு இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு இந்திய திரையுலகமே வாழ்த்துகளைத் தெரிவித்தது. Mohan Lal at... மேலும் பார்க்க

"சினிமா கனவுடன் மெட்ராஸ் போனேன்; ஆனால்" - மோகன் லால் சொன்ன நெகிழ்ச்சிக் கதை!

இந்த ஆண்டு 71-வது தேசிய விருது வழங்கும் விழாவில் நடிகர் மோகன் லால் தாதா சாகேப் விருதைப் பெற்றார். இதைக் கொண்டாடும் விதமாக கேரள அரசு, திருவனந்தபுரத்தில் மாபெரும் பாராட்டு விழா ஒன்றை நடத்தியிருக்கிறது. ... மேலும் பார்க்க