`விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!'- சொல்கிறார்...
காட்டுப்பன்றிகளை விரட்ட கொதிக்கும் வெந்நீர், இரக்கமற்ற செயலால் கொந்தளிப்பில் ஆர்வலர்கள்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் கழிவு மேலாண்மை திட்டங்களை முறைப்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. குடியிருப்புப் பகுதிகள் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்களில் உணவுக் கழிவுகள் கொட்டப்படுவதால் வனவிலங்குகளால் ஈர்க்கப்படுகின்றன.

இந்தக் கழிவுகளை உண்ண மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு வரும் கரடி, காட்டுப்பன்றி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளால் மனித எதிர்கொள்ளல்கள் ஏற்படுவதுடன், அவற்றிற்கும் கடுமையான உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
மக்கள் வாழிடங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தவிக்க உணவுக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வது மட்டுமே உரிய தீர்வு என வனவிலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பேருந்து நிலையம் பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகளை உண்ண காட்டுப்பன்றிகள் அதிகளவில் நடமாடி வரும் நிலையில்,

அவற்றை விரட்டுகிறோம் என்கிற பெயரில் கொதிக்கும் வெந்நீரை காட்டுப்பன்றிகள் மீது ஊற்றும் கடைக்காரர்களின் இரக்கமற்ற செயல் இயற்கை ஆர்வலர்களை கொந்தளிக்கச் செய்திருக்கிறது. காட்டுப்பன்றிகள் மீது இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தும் நபர்கள் மீது வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டு வருகின்றனர்.




















