செய்திகள் :

'எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்து, முழுநேர சினிமா விமர்சகராக மாறி..'- ஸ்டாலினை சாடும் பழனிசாமி

post image

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்வது குறித்து விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

"நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன்.

ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.

முளைத்த நெல் மூட்டை
முளைத்த நெல் மூட்டை

திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை,

ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது,

ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?

ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது.

தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?

அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?

அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான்.

விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!"

`விஜய்யை அதிமுக கூட்டணிக்கு அழைக்கவில்லை; ஆனால் வந்தால் வரவேற்போம்!'- சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த கே.டி ராஜேந்திர பாலாஜி கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதை செய்தால் இந்த அரசை நாங்கள் பாராட்டுவோம். அதை விடுத்துவிட்டு விளக்கம் ... மேலும் பார்க்க

'உயர்கல்வியை வணிகமயமாக்கும் மசோதாவை திரும்பப் பெறவேண்டும்' - தமிழ்நாடு அரசுக்கு திருமா அறிக்கை

தமிழ்நாடு அரசின் 'தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா'வை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்..."உயர்கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் நெல் கொள்முதலில் தாமதமா? - விமர்சனங்களுக்கு தமிழ்நாடு அரசு பதில்

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் குறித்து தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், "நெல் கொள்முதல் பணிகளை முந்த... மேலும் பார்க்க

LIC-ன்‌ ரூ.32,000 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்ய முயற்சியா?- எல்.ஐ.சி நிறுவனத்தின் பதில் என்ன?

அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' சமீபத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.குற்றச்சாட்டுஅதாவது, இந்திய அதிகாரிகள் எல்.ஐ.சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க

``டிடிவி தினகரன் Expiry Date முடிந்த அரசியல்வாதி" - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பாசனத்திற்காக அணையிலிருந்து 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள... மேலும் பார்க்க

Pallikaranai ஊழல்: Stalin சொன்னது வேறு நடப்பது வேறு | ஆதாரங்களை அடுக்கும் அறப்போர் ஜெயராமன்

பாதுகாக்கப்பட்ட நிலமாகக் கருதப்படும் ‘ராம்சார் குறியீடு’ பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு அரசு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளது என்றும் இதல் பல கோடி ரூபாய் ... மேலும் பார்க்க