செய்திகள் :

கெட்டி மேளம் சீரியலில் ஸ்ரீகுமார்: "யாருடைய வாய்ப்பையும் நான் பறிக்கல" - சர்ச்சைகளுக்குப் பதில்

post image

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ̀கெட்டி மேளம்'. இந்தத் தொடரில் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த சிபு சூர்யன் அந்தத் தொடரிலிருந்து சமீபத்தில் விலகியிருந்தார். அவருக்குப் பதிலாக நடிகர் ஶ்ரீகுமார் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமூகவலைத்தளப் பக்கங்களில் நடிகர் ஶ்ரீகுமார் இந்தத் தொடரில் கமிட் ஆனது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவற்றிற்குப் பதில் அளிக்கும் வகையில் ஶ்ரீகுமார் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

 ̀கெட்டி மேளம்' ஶ்ரீகுமார்
̀கெட்டி மேளம்' ஶ்ரீகுமார்

அதில், "எல்லாருக்கும் வணக்கம். நான் இப்ப கெட்டி மேளத்துல வெற்றி கேரக்டர்ல ரீப்ளேஸ்மெண்ட் ஆகியிருக்கேன். முதலில் எனக்குக் கிடைக்கிற வேலைக்காக ஜீசஸூக்கு நன்றி சொல்லிக்கிறேன். ஒரு நல்ல சீரியல். நல்ல புரொடியூசர். யாரடி நீ மோகினிக்கு அப்புறம் ஜீ தமிழ்ல எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு.

இதுக்கு முன்னாடி நடிச்ச சிபு சூர்யனுக்குப் பதில் நான் ரீப்ளேஸ் ஆகுறேன். அவர் ரொம்ப நல்லா நடிச்சிருந்தார். அவர் என்னை விட நல்லாவும் இருப்பாரு. ஆனா, அந்த அளவுக்கு முடியலைன்னாலும் என்னால என்ன முடியுமோ, எனக்கு என்ன தெரியுமோ அந்த மாதிரி இந்தக் கேரக்டருக்கு ஜஸ்டிஃபிகேஷன் பண்ணுவேன்.

பொதுவாகவே ஒருத்தருக்கு முன்னாடி நடிச்சவங்களைத்தான் பிடிக்கும் அது தப்பு சொல்லல. ஏன்னா எல்லாருக்கும் என்னைப் பிடிக்கணும்னு அவசியமில்ல. ஆனா, அவர் ஒரு முடிவெடுத்து இந்தச் சீரியலில் இருந்து விலகியிருக்கார். அதுல நான் தலையிட முடியாது.

என்னை நடிக்கிறீங்களான்னு கேட்டப்ப நான் சில விஷயங்கள் கேட்டுட்டு இதுதான் காரணம் அப்படின்னு சொன்னதுக்கு அப்புறம்தான் நான் நடிக்க சம்மதிச்சேன். யார் வாய்ப்பையும் நான் புடுங்கல. அவர் போனதுக்கு அப்புறம் இன்னொருத்தர் யாரையாவது நடிக்கக் கூப்டுறதுக்கு என்னைக் கூப்டாங்க. வேலைதானே செய்றோம்... உழைச்சுதானே சாப்பிடுறோம்! தப்பு கிடையாது.

ஶ்ரீ குமார்
ஶ்ரீ குமார்

அது யாரடி நீ மோகினி ஆக இருக்கட்டும், வானத்தைப் போல ஆக இருக்கட்டும் ஒரு நடிகர் போன பிறகு அந்தச் சீரியல் நிற்கக் கூடாது. ஏன்னா ஒரு சீரியல நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கு. அதுமட்டுமில்ல எனக்கும் வாழ்வாதாரம் இதுதான். அதனாலதான் ரீப்ளேஸ்மெண்ட் ஆக இருந்தாலும் நடிக்கிறேன்.

அதுல நிறைய டென்ஷன் இருக்கும். சில பேர் நம்மள திட்டுவாங்க, சிலருக்கு நம்மள பிடிக்காது. ஆனா, அதுக்கெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. என்னால முடிஞ்ச அளவுக்கு இந்த கேரக்டருக்கு ஜஸ்டிஃபிகேஷன் கொடுக்கிறேன். உண்மையா உழைக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

அந்தத் தொடரில் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிபு சூர்யன்,  "நான் உங்களுடைய நடிப்பைப் பார்த்தேன். முன்னதாகவே சன் டிவியில் உங்களுடைய பெர்ஃபாமன்ஸை பார்த்திருக்கேன். நீங்கள் உண்மையில் திறமையானவர். நானும் இதே துறையில் பணிபுரிந்திருக்கிறேன். நீங்கள் பார்க்க அழகானவர். உங்கள் நடிப்பு குறிப்பிடத்தக்கது" என அவருடைய பதிவிற்கு ரிப்ளை கமென்ட் செய்திருக்கிறார்.

 சிபு சூர்யன்
சிபு சூர்யன்

இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

BB Tamil 9: "ஒரிஜினல் கேம் எது? ஃபேக் கேம் எது?" - வைல்டு கார்டு என்ட்ரியில் நடிகை சாண்ட்ரா

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் புதிய திருப்பமாக பிரஜின் - சாண்ட்ரா இருவரையும் வைல்டு கார்டு மூலம் களமிறக்கவுள்ளனர்.பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், இந்த சீசனிலும்... மேலும் பார்க்க

BB Tamil 9: 'யாருக்கும் மரியாதை கொடுக்கத் தெரியல' - பிக் பாஸுக்கு என்ட்ரி கொடுக்கும் பிரஜின்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க

BB Tamil 9: "எதுக்கு என்னப் பத்தி முதுகுக்குப் பின்னாடி பேசுற"- பார்வதியிடம் கோபப்பட்ட வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.28) நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, ... மேலும் பார்க்க

BB Tamil 9: "Unwanted Success-னு எனக்கு பீல் ஆகுது" - கம்ருதீன் குறித்து விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.28) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 22: அலப்பறையை ஸ்டார்ட் செய்த பாரு; நாமினேஷன் தியாகம் செய்த பிரவீன்

பாரு, கம்ருதீன் போன்ற நபர்கள் இல்லையென்றால் இந்த சீசனில் கன்டென்ட் கிடைக்காது என்பது உண்மை. அது வணிகக் காரணம். ஆனால் தார்மீகமான நோக்கில் பார்த்தால் இப்படிப்பட்ட அடாவடியான நபர்கள் ஒரு சமூகத்திற்கு மிக ... மேலும் பார்க்க

BB Tamil 9: "ஆமா பார்வதி ஆர்மி கேம்ப் மாதிரி தான் அணியை வழிநடத்தப்போறேன்"- காட்டமான பிரவீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்.28) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, ... மேலும் பார்க்க