டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
பீகார் தேர்தல் 2025: `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' -இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்
பீகாரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு இந்தியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அனல் பறக்க பிரச்சாரங்களை செய்து வருகின்றன. நேற்று இந்தியா கூட்டணி தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அதில் சில முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்:
1. டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும்.
2.ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.
3.பீகாரில் உள்ள ஜீவிகா தீதிஸ் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் வேலை நிரந்தரமாக்கப்படும்.

4. ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் பணி நிரந்தர திட்டம் பீகார் முழுவதும் அமல்படுத்தப்படும்.
5. ஜீவிகா தீதிஸ் மாதம் ரூ.30,000-ஐ நிலையான சம்பளமாக பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வட்டி இல்லாக் கடன் வழங்கப்படும்.
6. ஆட்சிக்கு வந்த 20 நாள்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்கிற சட்டம் கொண்டுவரப்படும்.
7. அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம், தேர்வுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் மற்றும் தேர்வு மையத்திற்கு வந்து செல்லும் செலவுகள் இலவசமாக்கப்படும்.
8. வினாத்தாள் கசிவைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
9. திறன் சார்ந்த பணிகளை வளர்க்க ஐ.டி பூங்காங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் திறக்கப்படும்.
10. மாதா மாதம் நிதி உதவி வழங்கவும், திறன் பயிற்சிகள் வழங்கவும் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
11. பழைய ஓய்வுதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
12. மண்டி என்று அழைக்கப்படுகிற விவசாய உற்பத்தி சந்தை கமிட்டி மீண்டும் அமைக்கப்படும்.

13. 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக மாற்றப்படும். ஒரு நாளுக்கு ரூ.300 சம்பளம் கொடுக்கப்படும். நாடு முழுவதும் 100 நாள் திட்டத்தின் ஒரு நாள் சம்பளம் ரூ.400 ஆக உயர்த்த அழுத்தம் கொடுக்கப்படும்.
14. கைம்பெண்களுக்கு சமூக பாதுகாப்பு பென்சனாக மாதம் ரூ.1,500 வழங்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் ரூ.200 உயர்த்தப்படும். மாற்றுதிறனாளிகளுக்கு மாதப் பென்சனாக ரூ.3,000 வழங்கப்படும்.
15. வக்பு வாரிய சட்டத்தின் அமல் நிறுத்தி வைக்கப்படும்.
16. புத்த காயாவின் நிர்வாகம் புத்த மதத்தினருக்கு வழங்கப்படும்.
17. ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு அளவு 50 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தப்படும்.
ஆக, இந்திய கூட்டணி சலுகைகளை வாரி இரைத்திருந்திக்கிறது.
நாளை தேசிய முற்போக்கு கூட்டணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட உள்ளது. அது எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.















