செய்திகள் :

டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!

post image

வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன.

அதில் குறிப்பாக, குஜராத் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சென்னை அணிக்கு டிரேடிங் மூலம் பெறப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

கடந்த சீசனை கடைசி இடத்தில் முடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வலுப்படுத்த திறமையான வீரர்கள் வேண்டுமென ரசிகர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல்லில் டிரேடிங், மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் போன்றவையெல்லாம் அதிகமாக நடப்பது இல்லை என விளக்கமளித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் - Ashwin

மேலும் இதுகுறித்து அஸ்வின் வாஷிங்டன் சுந்தரிடமே பேசியதாக கூரியுள்ளார். அஷ்வின் தெரிவித்ததன்படி, வாஷிங்டன் சுந்தர் அவரிடம் கூறியது: "குஜராத்துல போன வருஷம் நான் ஃபுல்லா எல்லா மேட்ச்சும் விளையாடல. ஆனா நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன் அண்ணா. இங்க என்னோட கிரிக்கெட்டிங்குமே, கிரிக்கெட்டிங் ஆஸ்பெக்ட்டமே நல்லா வளர்ந்திருக்கு.

பேட்டிங்கும் சரி, பௌலிங்கும் சரி எனக்கு நிறைய ஒர்க் பண்றதுக்கு வால்யூம் கிடைச்சச்சு. பிராக்டீஸ் எல்லாம் அவுட்ஸ்டாண்டிங்கா இருக்கு. ரொம்ப என்ஜாய் பண்ணேன் நான் லாஸ்ட் இயர். அதனால நான் பர்சனலா டீமோட ரொம்ப ஹாப்பி அண்ணா. எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

டிரேடிங் பற்றி நான் எந்த விதமான தொடர்பும் செய்யல. அணி நிர்வாகம் தரப்பில் கம்யூனிகேஷன் பண்ணி இருந்தாங்கன்னா எனக்கு அதை பத்தி தெரியல. நான் வாழ்க்கையில் இப்ப இருக்குற இடத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்".

Rohit Sharma: 38 வயதில் நம்பர் 1; ICC தரவரிசையில் முதல் இடம் பிடித்த ரோஹித் சர்மா

ஐசிசி (ICC) ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரி... மேலும் பார்க்க

Shreyas Iyer: 'ஸ்ரேயஸ் ஐயர் நன்றாக இருக்கிறார்' - சூர்யகுமார் யாதவ் அப்டேட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது பலத்த காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஸ்ரேயஸ்... மேலும் பார்க்க

பிரதிகா ராவல் காயம்; அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் - கம்பேக் தரும் ஷபாலி!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. இரண்டாவது அரையிற... மேலும் பார்க்க

Karun Nair: "எனக்கு சிறப்பான விஷயங்கள் கிடைத்திருக்க வேண்டும்" - ரஞ்சியில் 174* விளாசிய கருண்!

இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் இரண்டு ஆண்டுகளாக சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வருபவர் கருண் நாயர். இரண்டு ரஞ்சி கோப்பை தொடர்களில் 1553 ரன்கள் சேர்த்து கலக்கினார். இதனை தொடர்ந்து இந்திய தேர்வுக் ... மேலும் பார்க்க

Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிகள் என்ன கூறுகிறது?

இந்தியா, இலங்கை இணைந்து நடத்திவரும் 13-வது மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்துவிட்டன.ஆஸ்திரேலியா (13 புள்ளிகள்), இங்கிலாந்து (11 புள்ளிகள்), தென்னாப்பிரிக்கா (10 புள்ளிகள்), இ... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவு; காயத்தால் உலகக் கோப்பையிலிருந்து விலகிய பிரதிகா ராவல்!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள், இந்தியா vs வங்காளதேசம் போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது.புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க