டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
Rohit Sharma: 38 வயதில் நம்பர் 1; ICC தரவரிசையில் முதல் இடம் பிடித்த ரோஹித் சர்மா
ஐசிசி (ICC) ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா மொத்தமாக 202 ரன்கள் எடுத்திருந்தார்.
இதில் ஒரு சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். இதன் மூலம் ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார்.
இதன் காரணமாக அவருடைய புள்ளிகள் 781 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளன.
இதன் மூலம் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
தனது 38-வது வயதில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து அசத்தி இருக்கும் ரோஹித் சர்மாவிற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா 781 புள்ளிகள் பெற்று உள்ள நிலையில், 764 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஸட்ரான் பிடித்திருக்கிறார்.
745 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் இருக்கிறார்.

.jpg)















