டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன?
'நான் நிறுத்திய எட்டாவது போர் இது' - இப்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமை பீற்றிக்கொண்ட இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் மீண்டும் ஆரம்பிக்கிறது போலும்.
இஸ்ரேல் தாக்குதல்
நேற்று காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல். இதற்கு, 'ஹமாஸ் தான் முதலில் தாக்கியது' என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை அந்த நாட்டின் அதிபர் நெதன்யாகு, 'ஹமாஸை எதிர்த்த சக்திவாய்ந்த தாக்குதல்' என்று குறிப்பிடுகிறார்.
இஸ்ரேல் தற்போதும் இந்தத் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலினால் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

ட்ரம்ப் பதில்
இந்தத் தாக்குதல் குறித்து ஜப்பானில் ட்ரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "எனக்கு தெரிந்தவரை, இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்கியுள்ளது. தங்கள் மீதான தாக்குதலை எதிர்க்க இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்று நான் நினைக்கிறேன்" என்று கூலாக பதிலளித்திருக்கிறார்.
தற்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவது போர் நிறுத்தத்தை மீறுவதே ஆகும். இந்தத் தாக்குதல்கள் போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.















