செய்திகள் :

ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" - ராகுல் காந்தி

post image

நாளை (நவம்பர் 6) பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்.

ஹரியானாவில் 5,21,619 போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரு தொகுதியில் ஒரே நபரின் புகைப்படம் 100 வாக்காளர்களின் பெயர்களில் இருப்பதாகவும், 8-ல் ஒரு வாக்கு போலியானது என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்திருக்கிறார்.

மேலும், வாக்குத் திருட்டு என்பதைத் தாண்டி ஹரியானாவில் ஆட்சியே திருட்டுதான் என்றும் வாக்குத் திருட்டு தொடர்பாக தான் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு 100% தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் உறுதியாகக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் ராகுல் காந்தி, "ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. ஹரியானா தேர்தலில் 5,21,619 போலி வாக்காளர்கள் இருப்பது உறுதியாகியிருக்கிறது. ஒரே நபரின் புகைப்படம் 100 வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கிறது.

இந்திய வாக்காளர் அடையாள அட்டைகளில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல்களின் புகைப்படங்கள்கூட இருக்கின்றன. ஹரியானா தேர்தலில் 8-ல் ஒரு வாக்கு போலியானது. வாக்குத் திருட்டு என்பதைத் தாண்டி ஹரியானாவில் ஆட்சி திருட்டே நடந்துள்ளது" என்று பேசியிருக்கிறார் ராகுல் காந்தி

Asia Cup 2025: பாகிஸ்தான் வீரர் 2 போட்டிகளில் இடைநீக்கம்; பும்ரா, சூர்யகுமார் மீது அபராதம்

2025 ஆம் ஆண்டு ஐசிசி ஆசியக் கோப்பைப் போட்டிகளின் போது பல நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று (நவ 4) உறுதிப்படுத்தியது.குறிப்பாக செப்டம்பர் 14, 21 மற்றும் 28 தேத... மேலும் பார்க்க

TVK Vijay Latest Speech | கரூர் சம்பவம் - அவர்கள் வன்மவாதிகள் | தமிழக வெற்றிக் கழகம்

"நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்லமுடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். அதனால்தான் அமைதி காத்தோம்"- தவெக விஜய் மேலும் பார்க்க

Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த... மேலும் பார்க்க

தவெக கூட்டம்: "கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க"- ஆதவ் அர்ஜுனா

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க

"கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?"- தவெக கூட்டத்தில் திமுகவை சாடிய நிர்மல் குமார்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க

'74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?

கனடா - வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் டாப் சாய்ஸ்களில் ஒன்று. ஆனால், இந்த சாய்ஸ் இனி தொடருமா என்கிற கேள்வி தற்போது பெரிதாக எழுந்துள்ளது. எவ்வளவு நிராகரிப்புகள்? கடந்த ஆகஸ்ட் மாதம், ... மேலும் பார்க்க