செய்திகள் :

TVK : 'கரூரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு!' - தவெக தீர்மானம்!

post image

தவெக-வின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. இந்த பொதுக்குழுவில் கரூரில் திட்டமிடப்பட்டு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்தப்பட்டதாக தீர்மானம் வாசித்திருக்கிறார்கள்.

மதியழகன்
மதியழகன்

மத்திய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து தவெகவின் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதில் முதல் தீர்மானமே கரூரில் உயிர் நீத்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம். அந்த தீர்மானத்தை கரூர் சம்பவத்தில் சிறை சென்று ஜாமீனில் வெளி வந்திருக்கும் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனே வாசித்தார். விஜய் அவரை ஆரத்தழுவி வரவேற்று தீர்மானத்தை வாசிக்க அனுப்பி வைத்தார்.

அவர் வாசித்த அந்த தீர்மானம், 'கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வெற்றித் தலைவர் மக்கள் சந்திப்பு பயணங்களை நடத்தினார். தலைவரின் அனல் பறக்கும் பேச்சும் ஆளும் அரசை நோக்கிய கேள்விகளும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது ஆள்வோருக்கு எரிச்சலூட்டியது.

இதனால் கரூரில் திட்டமிட்ட பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்தி செயற்கையான குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டதோ எனும் அளவுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தது. லட்சியப்பயணத்தில் பங்கெடுக்க வந்த உயிர் நீத்த அவர்களுக்கு பொதுக்குழுவின் இரங்கல்.' என்றார்.

பொதுக்குழு
பொதுக்குழு

இதேமாதிரி எட்டாவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் விஜய்யின் மக்கள் சந்திப்புகளுக்கு இதுவரை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை. மக்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கும் அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கரூர் சம்பவத்தில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்கு தவெக விஜய் கேள்வி

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த... மேலும் பார்க்க

தவெக கூட்டம்: "கரூர் செந்தில் பாலாஜி... அங்க ஏன் போனீங்கன்னு கேட்குறாங்க"- ஆதவ் அர்ஜுனா

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க

ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" - ராகுல் காந்தி

நாளை (நவம்பர் 6) பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடப்பதாகக் குற்றஞ்சாட்டி டெல்லியில் செய்தியாளர... மேலும் பார்க்க

"கரூர் சம்பவத்தில் நாங்கள் என்ன அப்படியா செய்தோம்?"- தவெக கூட்டத்தில் திமுகவை சாடிய நிர்மல் குமார்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.அந்த ... மேலும் பார்க்க

'74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?

கனடா - வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் டாப் சாய்ஸ்களில் ஒன்று. ஆனால், இந்த சாய்ஸ் இனி தொடருமா என்கிற கேள்வி தற்போது பெரிதாக எழுந்துள்ளது. எவ்வளவு நிராகரிப்புகள்? கடந்த ஆகஸ்ட் மாதம், ... மேலும் பார்க்க

இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு 'நேரு'தான் காரணமா? - சசி தரூர் கருத்தும் வரலாறும்!

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், இந்திய வாரிசு அரசியல் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில், இந்தியாவிலுள்ள வாரிசு அரசியலுக்கு நேருவும் காரணம் எனக் குற்றம்சாட்டி எழுதியிருப்பது ... மேலும் பார்க்க