ஹரியானா: "5,21,619 போலி வாக்காளர்கள்; ஒரு நபர் 100 வாக்கு செலுத்தியிருக்கிறார்" ...
பாகுபலி: "நான்தான் பிரபாஸ்; ரச்சிதாதான் அனுஷ்கா" - 'சரவணன் மீனாட்சி' நினைவுகளைப் பகிர்ந்த ரியோ ராஜ்
சிறந்த சின்னத்திரைக்கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், 'ஆண் பாவம் பொல்லாதது' படக்குழுவினர் கலந்துகொண்டிருந்தனர்.
அப்போது மேடையில் பேசிய ரியோ ராஜ், "கனா காணும் காலங்களுக்குப் பிறகு சரவணன் மீனாட்சி 2-ம் பாகத்துல நடிச்சேன்.
சரவணன் மீனாட்சி-ல நடிக்கும்போது அடுத்தடுத்து என்ன கதை வரும்னே எங்களுக்குத் தெரியாது.

வாரம், வாரம் மாறிகிட்டேதான் இருக்கும். மாசம் மாசம் புது கதைகள் வரும். நான் நடிக்க ஆரம்பிச்ச போது ஒரு கதை இருந்துச்சு.
6 மாசத்துக்கு அப்புறம் கதை மாறிருச்சு. இது சரவணன் மீனாட்சியே இல்லையே.
'இது ஏதோ நான் பார்த்த படம் மாதிரி இருக்கே அப்படி'னு யோசிப்பேன்.
அந்த மாதிரி நான் நடிச்ச சமயத்துல பாகுபலி ஹிட் ஆன டைம். அதை அப்படியே கொஞ்சம் மாத்தி நாடகத்துல வச்சாங்க.
நான்தான் பிரபாஸ். ரச்சிதாதான் அனுஷ்கா. பாகுபலி கேரக்டருக்காக எனக்கு விக்கு வச்சாங்க.
அப்போவே நான் பிரவீன் ( சரவணன் மீனாட்சி இயக்குநர்) அண்ணா கிட்ட, 'ப்ளீஸ் இதெல்லாம் வேணாம்'னு சொன்னேன்.
அப்போ தான் மீம் கல்ச்சர் வந்துச்சு. அப்போவே நான் சொன்னேன். என்னோட இந்தப் பாகுபலி போட்டோவையும், முத்து படத்துல வர வடிவேல் சாரோட போட்டோவையும் போட்டு என்ன கலாய்க்க போறாங்க அப்படினு சொன்னேன்.

இந்த எபிசோட் வெளியாகி அடுத்த இரண்டு நாள்ல அதே மாதிரி மீம் வந்துச்சு. 'எல்லாரும் என்ன பார்த்து சிரிக்குறாங்க அப்படி'னு பிரவீன் அண்ணே கிட்ட சொன்னேன்.
அந்த டைம்ல நிறைய ட்ரோல் வரும். ஆனா அது எல்லாமே எங்களுக்குள்ள பேசி சிரிச்சுக்குற மாதிரிதான் இருக்கும். வித்தியாசமான நாட்கள் அது" எனச் சிரித்துக்கொண்டே பகிர்ந்திருக்கிறார்.
















