Tvk Vijay Speech: அவசர அவசரமாக தனி நபர் ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? - முதல்வருக்க...
தங்கம் விலை உயரும்போது தங்க அடமானக் கடன் பெறுவது புத்திசாலித்தனமா?
சில நாள்களுக்கு முன்பு, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தது. இப்போது வேண்டுமானால், அது ஓரளவு நிலையான அளவில் இருந்து வரலாம்.
ஆனால், தற்போதும், தங்கம் விலை அதிகமாகும்போதும், தங்க நகை அடமானக் கடன் பெறுவது லாபமா என்பதற்கான பதிலை தருகிறார் My Assets Consolidation நிறுவனர் சுரேஷ் பார்த்தசாரதி.
"தங்க நகை அடமானக் கடன் என்பது முழுக்க முழுக்க தேவையைப் பொறுத்தது என்றாலும், சில விஷயங்களை நீங்கள் கட்டாயம் கவனிக்கவேண்டும்.
குடும்பம் நடத்துவதில் பிரச்னை, நான்கு மாதங்களில் வேறொரு இடத்தில் பணம் வரும்... ஆனால், இப்போது அவசரமாக பணம் தேவை, வியாபாரம் தொடங்குகிறீர்கள்... வேறொரு பேக் அப்பும் இருக்கிறது போன்ற சூழல்களில் தங்க நகை அடமானக் கடனைத் தாராளமாக வாங்கலாம்.
இப்போது தங்க நகை அடமானக் கடன் பெறுகிறேன். ஆனால், அதை மீட்பதற்கான வழி எதுவும் தெரியவில்லை என்பவர்கள் இந்தக் கடனை வாங்குவதை தவிர்த்துவிடுவது நல்லது. அதற்கு பதிலாக, தங்க நகைகளை விற்றே விடலாம்.
என்ன சிக்கல் ஏற்படும்?
தங்கம் விலை உச்சத்தில் இருக்கும்போது அடமானக் கடன் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அடுத்த சில தினங்களில் தங்கம் விலை குறைந்தால், முன்னால் வாங்கிய கடன் தொகைக்கு நிகரான சில நகைகளை கொடுக்க வேண்டியதாக இருக்கும். இது பெரும்பாலான மக்களுக்கு சிரமமாகிவிடும். இதனால், தங்கம் விலை உயர்வின் போது, அடமானக் கடன் வாங்குவதை முடிந்தளவு தவிர்த்துவிடுவது நல்லது.

அப்படியே வாங்கினாலும், இருக்கும் தங்க நகையின் மதிப்பில் 65 - 70 சதவிகிதம் மட்டும் கடன் பெறலாம். இதனால், மேலே சொல்லும் சூழலைத் தவிர்க்கமுடியும்.
பிசினஸிற்கு வாங்கப்போகிறேன் என்றால், அந்தப் பிசினஸில் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கலாம். அந்தக் கடனிலும் ஆரம்பத்தில் வட்டியை மட்டும் கட்டுவதுபோல தேர்ந்தெடுத்தால், நீங்கள் லாபம் பார்க்க ஆரம்பிக்கும்போது, அசலையும் சேர்த்து கட்டுவது சுமையாகத் தெரியாது" என்று கூறினார்.




















