BB Tamil 9: "28 நாள் பேசாத துஷார் இன்னைக்கு ஏன் பேசுறாரு"- திவ்யா கணேஷ் காட்டம்
Career: B.Sc படித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் வேலை! யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்னென்ன பணிகள்?
ஜூனியர் இன்ஜினீயர் (Junior Engineer), டிப்போ பொருள் கண்காணிப்பாளர் (Depot Material Superintendent), வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் (Chemical and Metallurgical Assistant) ஆகிய பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 2,569
ஆரம்ப சம்பளம்: ரூ.35,400
வயது வரம்பு: 18 - 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: இன்ஜினீயரிங் துறைகளில் மூன்று ஆண்டு டிப்ளமோ அல்லது இன்ஜினீயரிங் அல்லது தொழில்நுட்பத் துறைகளில் இளங்கலை (B.Sc) பட்டம். இது குறித்த முழு விவரம் இங்கே:

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
இரண்டு கட்ட கணினி அடிப்படையிலான தேர்வுகள், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
















