இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு 'நேரு'தான் காரணமா? - சசி தரூர் கருத்தும் வரலாறும்...
"அதிமுகவில் உள்ள குடும்ப அரசியலால் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு" - இபிஎஸ் மீது செங்கோட்டையன் புகார்
அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இணைந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தால், அவரை முதலில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார்.

“நட்டாற்றில் செங்கோட்டையன்!” - இழுத்துவிட்ட நால்வர்... கைவிட்ட ஐவர்!
அதைத் தொடர்ந்து, கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "திமுகவைப் போல அதிமுகவிலும் குடும்ப அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்களும் வருகிறார்கள். இது நாடே அறிந்த உண்மை" என்று குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு, "இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்" எனக் கடிதம் எழுதியிருக்கிறார்.
இது அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தமிழக அரசியலிலும் பேசுபொருளாகியிருந்தது. செங்கோட்டையனை இயக்குவது யார் என்ற கேள்விகளும் விவாதப் பொருளாகியிருந்தன.
இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "தேர்தல் ஆணையத்திடம் 250 பக்கத்தில் முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறோம்.
அதை வெளியில் சொல்ல முடியாது. தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.

எடப்பாடியின் மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள். அது மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கிறது. அதிமுகவில் இருக்கும் மூத்த தலைவர்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவர்கள் யார் என்று வெளியில் சொல்ல முடியாது.
53 ஆண்டுகள் அரசியலில் இருக்கிறேன், என்னை யாரும் இயக்க முடியாது." என்று பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.











