செய்திகள் :

30% மதிப்பு குறைந்தும் தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்தை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத மக்கள்! - இனி?

post image

மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராகிம், இப்போது பாகிஸ்தானில் தனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளுடன் பதுங்கியிருக்கிறான். ஆனால் தங்களது நாட்டில் தாவூத் இப்ராகிம் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

தாவூத் இப்ராகிம் மற்றும் அவரின் குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை ஏலம் விட்டு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த சொத்துக்களை வாங்க பொதுமக்கள் அச்சப்பட்டனர். அதோடு இச்சொத்துக்களில் சட்டச்சிக்கல் இருக்கும் என்று அஞ்சினர்.

ஆனால் இப்போது மக்கள் தாவூத் சொத்துக்களை ஏலம் விட்டால் அதனை வாங்க முன் வருகின்றனர். தாவூத் இப்ராகிம் குடும்பத்திற்கு சொந்தமான 4 சொத்துக்கள் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாக்கே என்ற கிராமத்தில் இருக்கிறது.

ஹசீனா, தாவூத்

மும்பாக்கே கிராமம் தான் தாவூத் இப்ராஹிம் சொந்த ஊர் ஆகும். அங்கு தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்கு சொந்தமான வீடு உட்பட சில சொத்துகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டது. தற்போது தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் பெயரில் 4 விவசாய நிலம் இருந்தது.

அந்த நிலம் தான் இப்போது விற்பனைக்கு வந்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதில் 3 சொத்துகள் ஏலம் விடப்பட்டது. ஆனால் அவை விற்பனையாகவில்லை. ஒரு சொத்தை டெல்லி வழக்கறிஞர் அஜய் என்பவர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிகமாக கேட்டு ஏலத்தில் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அதற்கான பணத்தை செலுத்தவில்லை.

இதனால் அந்த விற்பனை ரத்து செய்யப்பட்டது. தற்போது மேலும் ஒரு சொத்தை சேர்த்து 4 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. இதில் சில சொத்துகள் கடந்த முறை ஏலம் போகாத காரணத்தால் இம்முறை சொத்து மதிப்பை 30 சதவீதம் குறைத்து ஏலம் விடப்பட்டன.

ஆனாலும் ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால் மீண்டும் ஒரு முறை ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த சொத்துகள் முதலில் தாவூத் இப்ராஹிம் தாயார் அமீனா பெயரில் இருந்தது. அதன் பிறகு தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்கர் பெயருக்கு மாறியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1730 சதுர மீட்டர் விவசாய நிலம் ரூ.3.28 லட்சத்திற்கு ஏலம் போனது. இதே போன்று 2020ம் ஆண்டு தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்குச் சொந்தமான 6 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. 2019, 2018, 2017ம் ஆண்டும் மும்பையில் உள்ள தாவூத் இப்ராஹிம் குடும்ப சொத்துகள் ஏலத்தில் விற்கப்பட்டன செய்யப்பட்டது.

தற்போது மும்பையில் தாவூத் இப்ராஹிம் குடும்பத்திற்குச் சொந்தமான பெரும்பாலான சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஏலத்தில் விற்பனை செய்துவிட்டனர். தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமான கார் ஒன்று ரூ.32 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதே போன்று கும்பாகே கிராமத்தில் உள்ள தாவூத் இப்ராஹிம் வாழ்ந்த வீடு ரூ.11 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன. அதிகமான சொத்துகளை இஸ்லாமிய டிரஸ்ட்களும், டெல்லி வழக்கறிஞரும் ஏலத்தில் எடுத்திருக்கின்றனர்.

TVK : 'கரூரில் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு குறைபாடு!' - தவெக தீர்மானம்!

தவெக-வின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. இந்த பொதுக்குழுவில் கரூரில் திட்டமிடப்பட்டு பாதுகாப்பு குறைபாடு ஏற... மேலும் பார்க்க

"இனி எதிரிகளை தோலுரித்துக் காட்டுவதுதான் ஒரே வேலை"-தவெக சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் என்.ஆனந்த்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த... மேலும் பார்க்க

`கலைஞரின் குட் புக்; இருவருக்கும் பிடிக்கவில்லை' - மு.பெ.சாமிநாதனின் பொறுப்பு; பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்ட தி.மு.க.-வில் அக்கட்சித் தலைமை அதிரடியாக மாற்றத்தை செய்திருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி, திருப்பூர் தெற்கு மாவட்டச்... மேலும் பார்க்க

New York தேர்தலில் வெற்றி! இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் - யார் இந்த Zohran Mamdani?

நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி சாதனை வெற்றி பெற்றவர், அமெரிக்காவின் இன்றைய பேசுபொருள்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறந்த நகரமான நியூயார்க்கில், "இவருக்கு வாக்களித்த... மேலும் பார்க்க

SIR: `இது சட்டவிரோதமானதா?' - திமுக குற்றச்சாட்டும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் விளக்கமும்!

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் பணிகளும் தொடங்கிவிட்டது. ... மேலும் பார்க்க

"அதிமுகவில் உள்ள குடும்ப அரசியலால் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறு" - இபிஎஸ் மீது செங்கோட்டையன் புகார்

அதிமுகவில் உள்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மன நிலையில் உள்ளார்கள். அந்த வரிசையில் தற்போ... மேலும் பார்க்க