'74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு' - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட்...
சத்தீஸ்கர்: பயணிகள் ரயில், சரக்கு ரயிலில் மோதி 11 பேர் பலி - என்ன நடந்தது?
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர்-கட்னி பிரிவில் லால் காடன் பகுதிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (நவ 4) கோர்பா பயணிகள் ரயில், நின்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பயணிகள் ரயிலின் முன்பகுதி பெட்டிகள் முழுமையாக சேதமடைந்தது.
விபத்து நடந்த இடத்திலிருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், மோதலின் கடுமையான விளைவுகளைக் காட்டுகின்றன.
விபத்து நடந்த உடனேயே ரயில்வே அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உட்பட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நொறுங்கிய பெட்டிகளுக்கு நடுவில் சிக்கி இருந்த பயணிகளை மீட்பு குழுவினர் கவனமாக மீட்டனர்.
மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இடிபாடுகள் காரணமாக உடனடியாக வெளியே வர முடியாமல் சிக்கியிருந்தவர்களுக்கு, ரயிலுக்குள் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஒரு கைக்குழந்தை உட்பட பலரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ரயில்வே அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட அறிக்கைகள், இது சிக்னல் கோளாறு அல்லது மனிதப் பிழை காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன.
இந்த மோதலால் மேல்நிலை மின்சார வயரிங் மற்றும் சிக்னல் அமைப்புகள் பெருமளவில் சேதமடைந்து, அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மின்சார அமைப்புகள் மற்றும் தண்டவாளங்களை சரிசெய்ய தொழில்நுட்பக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Bilaspur Train Accident
— Sumit (@SumitHansd) November 4, 2025
6 dead, many injured after passenger train collides with goods train in Chhattisgarh
Like & Retweet: Railway Minister Ashwini Vaishnaw Should Resign.#TrainAccident | #Chhattisgarhpic.twitter.com/Yhf9J9OinW

















