``சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன" - பாஜக எம்.பி சர்ச்சைக...
'பயோகேஸ் உரம், மாடித்தோட்டம், ஆர்கானிக் முறை' - காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் ரகுல் பிரீத் சிங்
பாலிவுட் நடிகைகளில் அதிகமானோர் தங்களது வீடுகளில் மாடித்தோட்டம் வைத்திருக்கின்றனர். நடிகை ரேகா தனது வீட்டு வளாகத்தில் தோட்டம் வைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தனது வீட்டில் வைத்திருக்கும் மாடித்தோட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. தனது நீண்ட நாளைய காதலன் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டுள்ள ரகுல் பிரீத் சிங், மும்பை பாந்த்ராவில் உள்ள பூஜா காசா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இக்கட்டிடம் முழுக்க நடிகை ரகுல் பிரீத் சிங் குடும்பத்திற்குச் சொந்தமானது ஆகும்.
இந்தக் கட்டிடத்தில்தான் தற்போது தற்காலிகமாக நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்தோடு வாடகைக்கு வசித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் இயற்கையோடு இணைந்து வாழ்வதற்காக மாடியில் மிகப்பெரிய அளவில் தோட்டம் அமைத்து இருக்கிறார்.

அதோடு மாடியில் நீச்சல் குளமும் அமைத்துள்ளார். மாடிப்பகுதிக்குச் சென்றாலே ரிசார்ட்டிற்குச் சென்றது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.
ரகுல் பிரீத் சிங்கும், அவரது கணவரும் இந்த மாடியில் ஆர்கானிக் தோட்டம் அமைத்திருக்கின்றனர். இந்தத் தோட்டத்தில், தக்காளி, பூசணி, பாகற்காய், மிளகாய் மற்றும் பல்வேறு இலை காய்கறிகளைப் பயிரிடுகின்றனர். இதற்கு சந்தையில் விற்கப்படும் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு உகந்த உரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்த உரம் பயோகேஸ் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
அதாவது பயோகேஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கழிவுப் பொருள் இந்த உரத்தை உருவாக்கப் பயன்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் வீட்டிலேயே ஆர்கானிக் காய்கறிகளை வளர்க்க அத்துறையில் தொடர்புடைய நிபுணர் ஒருவரின் ஆலோசனையைப் பெற்று இதனை அமைத்திருக்கின்றனர்.
இந்த மாடித்தோட்டத்தில் இந்த பாலிவுட் தம்பதி தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து பேசுகின்றனர். அவர்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்கின்றனர். அதோடு நீச்சல் குளத்திற்கு அருகில் அமர்ந்து உணவு உண்பதற்கும் வசதி செய்துள்ளனர்.


















