செய்திகள் :

Abhishek Bachchan: பணம் கொடுத்தா விருது வாங்கினேன்?- விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்

post image

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் 'I Want To Talk' என்ற படத்தில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதை வென்றார்.

ஆனால் அந்த விருதை அவர் திறமையால் வெல்லவில்லை பணம் கொடுத்தும், பிஆர் வேலைகள் செய்தும்தான் வாங்கினார் என்று சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக அபிஷேக் பச்சன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன்

"ஒரு விஷயத்தை நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். நான் எந்த விருதையும் PR வேலைகள் செய்தோ, பணம் கொடுத்தோ வாங்கியதில்லை.

நான் செய்ததெல்லாம் கடின உழைப்புதான். ரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.

ஆனால் நான் சொல்வதை நீங்கள் நம்பப்போவதில்லை என்றும் எனக்கு தெரியும்.

அதனால் உங்களை அமைதிப்படுத்த சிறந்த வழி என்னவென்றால் இன்னும் கடினமாக உழைப்பதுதான்.

அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன்

அப்போதுதான் எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் எந்த விருதையும், நான் செய்யப்போகும் சாதனையையும் நீங்கள் சந்தேகப்படமாட்டீர்கள்.

உங்கள் நினைப்பை நான் தவறென்று நிரூபிப்பேன்" என்று அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார்.

"அந்தப் பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது" - விவசாயப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்

வேளாண் திருத்த மசோதாவை எதிர்த்து 2020-21-ம் ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகையும், பா.ஜ.க எம்.பி-யுமான கங்க... மேலும் பார்க்க

"8 மணிநேர வேலை வேண்டும்; நான் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும்" - ராஷ்மிகா பளிச் பதில்

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'தி கேர்ள்ஃபிரண்ட்' திரைப்படம் நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் வெளியீட்டையொட்டி நடந்த இப்படத்தின் நிகழ்ச்சியில், சமீபத... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் விவகாரம்: சல்மான் கானை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்; என்ன நடந்தது?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ரியாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது அவர் தெரிவித்த சில கருத்துக்கள் பாகிஸ்தானை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.மத்திய கிழக்கு நாடுகளில் இந்த... மேலும் பார்க்க

``முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை" - பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலாமானார்

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா இயற்கை எய்தினார். 74 வயதான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து நேற்றைய தினம் இவரின் உடல்நிலை மோசமாகியிரு... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது ஏன்? - `வெளிப்படைத்தன்மை முக்கியம்' ஜான்வி கபூர் ஓபன் டாக்

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தனது காதலனை அழைத்து செல்வது வழக்கம். ஜான்வி கபூர் ... மேலும் பார்க்க

மகளை அறிமுகப்படுத்திய தீபிகா - ரன்வீர் தம்பதி; வைரலாகும் புகைப்படம்

பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவுடன் இந்த தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகர்ந்துள்ளனர். செப்டம்பர் 2024-ல் துவா பிறந்தார். தீபிகா பட... மேலும் பார்க்க