90 நிமிடங்களில் உங்க நிதி வாழ்க்கையை மாத்திடலாம் - எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேர்வு!
சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்கள் 'தேசிய அறிவியல் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய அறிவியல் விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருது விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர், விஞ்ஞான் டீம் என 4 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலப்பில் பிரதீப், மோகனசங்கர் சிவப்பிரகாசம், ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் மோகனசங்கர் சிவபிரகாசம், வேதியியல் துறை பேராசிரியர் தலப்பில் பிரதீப் விஞ்ஞான் ஸ்ரீ விருதும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங் துறை பேராசிரியை ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகியோர் விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேசியிருக்கும் சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி, "அறிவியல், தொழில்நுட்பம் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தேசிய அறிவியல் விருதுக்கு எங்களது 3 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமையாக இருக்கிறது.
அவர்களின் சாதனையானது நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் சென்னை ஐஐடியின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்



















