ஆல் அவுட் ஆனாலும் 339 டார்கெட் வைத்த ஆஸ்திரேலியா; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இ...
`வேணாம் நிறுத்துங்க!' - பெண்ணிடம் கெஞ்சிய பயணிகள்; வைரலான வீடியோ
ரயில் பயணத்தின்போது பெண் ஒருவர் கண்ணாடியை உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தூர் - டெல்லி ரயிலின் ஏசி இருக்கையில் இருந்த அந்த பெண், தனது பணப்பை (பர்ஸ்) காணாமல் போய்விட்டதாகவும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறைகூறியிருக்கிறார்.
வீடியோவில் சக பயணிகள் அந்த பெண்ணை நிறுத்துமாறு கெஞ்சியபோதும் அவர் கோபத்தில் மீண்டும் மீண்டும் அடித்து ஜன்னல் கண்ணாடியை உடைக்கிறார்.

அவர் அருகில் இருக்கும் குழந்தை அவரது குழந்தையாக இருக்கலாம் எனச் சொல்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மின்ட் தளம் வெளியிட்ட செய்தியறிக்கையில், "பயணத்தின்போது திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது. ரயில்வே காவல்துறை அவருக்கு உதவாததனால் விரக்தியடைந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் கவலையளிப்பதாக இணையதளவாசிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அந்தக் குழந்தை இதைப் பார்க்கும் நிலை வந்திருக்கக்கூடாது என ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.
மற்றொருவர் "அவர்தான் அவரது உடைமைகளை கவனமாக வைத்திருக்க வேண்டும். ரயில்வே பொறுப்பாகாது. அரசுக்கு அவர் ஏற்படுத்திய இழப்புக்கு அவரிடம் அபராதம் வசூல் செய்ய வேண்டும்" எனக் கமண்ட் செய்துள்ளார்.















