Chiyaan 63: 23 வருடங்களுக்குப் பிறகு புதுமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்! - வெள...
BB Tamil 9: "விக்கல்ஸ் விக்ரமுக்கு தைரியம் இல்ல" - காட்டமான திவாகர்
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய (அக். 30) நாளுக்கான மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் " இவங்கதான் அதுன்னு சொல்ல விக்கல்ஸ் விக்ரமுக்கு தைரியம் இல்ல. சீக்கு வந்த கோழி மாதிரி 24 மணி நேரமும் தூங்கிட்டுதான் இருக்கான். இந்த 20 நாள்ல அவர் என்ன சாதிச்சுட்டாருனு" திவாகர் சொல்ல FJ கிண்டல் செய்தார். அதற்கு திவாகர் "நான் பண்ணதுல நீ 30 பர்சன்டேஜ்கூட பண்ணிருக்க மாட்ட தம்பி.

குரூப்பிசம் உங்களை காப்பாத்தாது. ரெண்டு நாமினேஷன் நான் சந்திச்சுருக்கேன். எங்க நீங்க மக்களை ஃபேஸ் பண்ணி காமிங்க பார்ப்போம்" என திவாகர் காட்டமாகப் பேசினார்.















