"யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் தாமதமாகுமா?" - தயாரிப்பு நிறுவனத்தின்...
BB Tamil 9: "அவங்க குரூப்பிசம் பண்றாங்க"- திவாகர், சபரி மோதல்
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய (அக். 30) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் "சூப்பர் டீலக்ஸ் வீட்டார் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை பிக் பாஸ். அவர்களுக்குள்ளேயே ஓட்டுப்போட்டு குரூப்பிசம் பண்றாங்க.

சாப்பாடு விஷயத்துல இருந்து எல்லா விஷயத்துலயும் ரொம்ப மோசமா நடந்துக்கிறாங்க" என்று திவாகர் சொல்ல "சாப்பாடு விஷயத்துல உன்கிட்ட யாரு மோசமா நடந்துக்கிட்டாங்க" என சபரி சண்டைபோடுகிறார்.















