டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!
BB Tamil 9: "நீ முதல்ல நியாயமா பேசுறியா?" - திவாகரிடம் எகிறிய சபரி
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமீத் பார்கவ் செல்லவிருக்கின்றனர்
இந்நிலையில் இன்றைய (அக். 29) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் " நான் வைலன்ஸ் பண்றேன்னு சொல்றீங்க, இன்னைக்கு திவாகரும் அதைதான் பண்ணாரு" என கம்ருதீன், சபரியிடம் சொல்கிறார்.

சபரி இதனை திவாகரிடம் கேட்கும்போது "நியாயமா பேசு சபரி" என்று சொல்ல "நீ முதல்ல நியாயமா பேசுறியா?" என சபரி காட்டமாக பேசுகிறார். இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்படுகிறது.


















