மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு ...
BB Tamil 9: "உன் தகுதி தராதரத்துக்கு நீ அப்படித்தான் பேசுவ" - ரம்யாவைச் சாடிய திவாகர்; எகிறும் சபரி
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர்.

கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமீத் பார்கவ் செல்லவிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்றைய (அக். 30) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.
"இந்த வீட்டில் சாப்பிடறது, தூங்கிறது இந்த வேலையை மட்டுமே செய்றவுங்க யாரு?" என டாஸ்க்கில் வினோத் கேட்க, ரம்யா ஜோ, திவாகரையும், விஜே பார்வதியையும் சொல்கிறார்.

இதனால் கோபப்பட்டு பேசிய திவாகர், ரம்யா ஜோவை, "உன்னோட தகுதி தராதரத்துக்கு நீ அப்படித்தான் பேசுவ" என வார்த்தையை விட, சபரி உச்சக்கட்ட கோபமடைகிறார்.
"என்ன தகுதி தராதரம்னு பேசிட்டு இருக்கிங்க. அவளுக்கு என்ன தகுதி இல்ல. என் தங்கச்சியைப் பத்தி பேசி, அதை நான் கேட்ட அது குரூப்பிசமா?" என திவாகரிடம் சண்டை போடுகிறார்.
















