"யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் தாமதமாகுமா?" - தயாரிப்பு நிறுவனத்தின்...
கொள்ளையடிக்க சென்ற ஹோட்டலில் உல்லாசம்; சிசிடிவி கேமராவில் சிக்கிய காதல் ஜோடி - வீடியோவால் அதிர்ச்சி
அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் நள்ளிரவில் திருடச் சென்ற ஜோடி, உணவகத்திற்குள் நுழைந்ததும் பாலியல் செயலில் ஈடுபட்டு பின்னர் கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் அனைத்து நடத்தைகளும் அங்கு பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ‘மான் செரி’ (Mon Cheri) என்ற பிரபலமான உணவகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
திருடுவதற்காக நுழைந்த இவர்கள் அங்கு முதலில் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னரே அவர்கள் திருட்டு வேலையை நடத்தி இருக்கின்றனர்.

சுமார்$450 டாலர் (இந்திய மதிப்பில் 39,000 ரூபாய்), ஊழியர்கள் பயன்படுத்தும் ஐ போன், மதுபான பாட்டில் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். திருடுவதற்காக அந்த உணவகத்தின் கதவுகளையும் அவர்கள் சேதப்படுத்தி இருக்கின்றனர்.
இந்த வினோத திருட்டு சம்பவம் குறித்து உணவகத்தின் உரிமையாளர் லெக்ஸி கலிஸ்கன் கூறுகையில்,"இது மிகவும் விசித்திரமான மற்றும் அருவருப்பான செயல். எங்களின் உணவகம் காதல் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பிரபலமானது. ஒருவேளை எங்கும் ரோஜாப்பூக்களாக இருந்ததால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளில் பதிவான ஆதாரங்களைக் கொண்டு இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

















